Valentine’s Day 2026 : சிவப்பு ஏன் காதலின் நிறம் தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்! | TV9 Tamil News

Valentine’s Day 2026 : சிவப்பு ஏன் காதலின் நிறம் தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

Published: 

06 Feb 2026 22:27 PM

 IST

ரோஜா மலர்கள், இதயம் வடிவ பலூன்கள், வாழ்த்து அட்டைகள், உடைகள் என காதலர் தினத்தில் எங்கும் சிவப்பு நிறமே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், சிவப்பு நிறம் ஏன் காதலின் அடையாளமாக மாறியது? அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

1 / 5இரத்தத்தின் நிறம் என்பதால், அது உயிர், ஆற்றல் மற்றும் வளம் ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் சிவப்பு நிறத்தை உயிர்சக்தி மற்றும்  வளர்ச்சியின் குறியீடாக கலைப்படைப்புகளில் பயன்படுத்தினர். ரோமர்கள் காதல் இளவரசியான வீனஸிற்கு பயன்படுத்தினர். இது சிவப்பை சக்திவாய்ந்த அடையாளமாக மாற்றியது.

இரத்தத்தின் நிறம் என்பதால், அது உயிர், ஆற்றல் மற்றும் வளம் ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் சிவப்பு நிறத்தை உயிர்சக்தி மற்றும் வளர்ச்சியின் குறியீடாக கலைப்படைப்புகளில் பயன்படுத்தினர். ரோமர்கள் காதல் இளவரசியான வீனஸிற்கு பயன்படுத்தினர். இது சிவப்பை சக்திவாய்ந்த அடையாளமாக மாற்றியது.

2 / 5

அதற்கடுத்த காலக்கட்டங்களில் ஐரோப்பாவில் சிவப்பு நிறம் காதலின் அடையாளமாக உறுதிப்படுத்தப்பட்டது. வீனஸுடன் இணைக்கப்பட்ட சிவப்பு ரோஜா, காதலின் பரிசாக மாறியது. ஆண்கள் தங்கள் காதலை பிரதிபலிக்க சிவப்பு நிற ஆடைகள் அணிந்தனர். கவிஞர்கள், காதல் உணர்வின் அடையாளமாக முகம் சிவப்பாக மாறுவது குறித்து கவிதைகள் எழுதினர் . இதனால் சிவப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு மொழி ஆக இருந்தது.

3 / 5

சிவப்பு நிறம் மனித உணர்ச்சிகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிவப்பு நிறம் இதயத் துடிப்பை அதிகரித்து, உற்சாகத்தையும் கவன ஈர்ப்பையும் தூண்டும் தன்மை கொண்டது. சிவப்பு நிற உடை அணிந்தவர்கள் அதிக தன்னம்பிக்கையுடனும், கவர்ச்சியுடனும் தோன்றுவதாகப் பார்க்கப்படுகின்றனர். இந்த உளவியல் தாக்கமே, வாலண்டைன்ஸ் டே பரிசுகள் மற்றும் அலங்காரங்களில் சிவப்பை முதன்மை நிறமாக மாற்றியுள்ளது.

4 / 5

18 அல்லது 19ஆம் நூற்றாண்டுகளில் அச்சிடப்பட்ட வாலண்டைன்ஸ் டே கார்டுகள் பிரபலமானபோது, சிவப்பு இதயங்கள் அதன் மையக் குறியீடாக மாறின. சிவப்பு இதயம் அன்பு, உண்மைத்தன்மை ஆகிய அனைத்தையும் ஒரே அடையாளத்தில் வெளிப்படுத்தியது. இன்று, சிவப்பு இல்லாமல் வாலண்டைன்ஸ் டே நினைத்துப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

5 / 5

சீனாவில் சிவப்பு அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் நிறமாகக் கருதப்படுகிறது. அங்கு திருமணங்களில் அதற்கு முக்கிய இடம் உண்டு. இந்தியாவில், மணமகளின் சிவப்பு நிற புடவை நல்வாழ்வுக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த மரபுகள் வாலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்களோடு இயல்பாக இணைந்து, சிவப்பை உலகளாவிய காதல் நிறமாக மாற்றுகின்றன.

Follow Us