“கீச் கீச்” என சத்தமிடும் காட்டு பறவைகள்.. திகிலூட்டும் ஜங்கில் சவாரி.. டாப்பான டாப்சிலிப்.. ஒரு முறை போயி பாருங்க! | TV9 Tamil News

“கீச் கீச்” என சத்தமிடும் காட்டு பறவைகள்.. திகிலூட்டும் ஜங்கில் சவாரி.. டாப்பான டாப்சிலிப்.. ஒரு முறை போயி பாருங்க!

Updated On: 

27 Feb 2026 21:36 PM

 IST

Topslip Tourist Spot: கீச் கீச் என சத்தமிடும் காட்டு பறவைகள் மற்றும் காட்டு யானைகளுக்கு மத்தியில் ஜங்கில் சவாரி செல்வதற்கு ஏற்ற இடமாக விளங்கி வருகிறது கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள டாப்சிலிப் சுற்றுலா தலம். இந்த இடத்துக்கு கோடை விடுமுறையில் போயி பாருங்க.

1 / 5கோயம்புத்தூர் மாவட்டம்,  பொள்ளாச்சி அருகே  ஆனைமலை  புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது டாப்சிலிப்  சுற்றுலா தலம்.  இங்கு,  பசுமை  போர்த்திய மலைகள்,  படர்ந்து விரிந்த  அடர்ந்த காடுகள்,  அந்த காட்டினுள்  சுற்றித் திரியும்  யானைகள்,  கீச் கீச் என  சத்தமிடும் பறவைகள்  உள்ளிட்டவை நிறைந்த  ரம்யமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள்  திரில்லிங் பயணத்துக்காக  ஜங்கிள் சவாரி ட்ரக்கிங்  செல்லலாம். மேலும்,  அந்த பகுதியில்  வளர்க்கப்படும்  யானைகள் முகாமுக்கு சென்று  அவற்றுக்கு உணவளித்து மகிழலாம்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது டாப்சிலிப் சுற்றுலா தலம். இங்கு, பசுமை போர்த்திய மலைகள், படர்ந்து விரிந்த அடர்ந்த காடுகள், அந்த காட்டினுள் சுற்றித் திரியும் யானைகள், கீச் கீச் என சத்தமிடும் பறவைகள் உள்ளிட்டவை நிறைந்த ரம்யமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் திரில்லிங் பயணத்துக்காக ஜங்கிள் சவாரி ட்ரக்கிங் செல்லலாம். மேலும், அந்த பகுதியில் வளர்க்கப்படும் யானைகள் முகாமுக்கு சென்று அவற்றுக்கு உணவளித்து மகிழலாம்.

2 / 5

அந்தப் பகுதியில் வனத்துறை சார்பில் ஜங்கில் சவாரி நடத்தப்படுகிறது. இதில் பயணம் செய்து கொண்டே காட்டு மாடுகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிதான பறவைகளை கண்கள் குளிர கண்டு ரசிக்கலாம். மேலும், அடர்ந்து வளர்ந்துள்ள காடுகளுக்குள் கால் நடையாக நடந்து சென்று காடுகளின் அழகை ரசிப்பதுடன், அங்கு நிலவி வரும் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து மகிழலாம்.

3 / 5

மேலும், அந்தப் பகுதியில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ஆழியாறு அணையின் தோற்றத்தையும், அதில் நிரம்பி இருக்கும் நீரின் அழகையும் கண்டு ரசிக்காமல் உங்களால் திரும்ப முடியாது. இதை பார்த்து விட்டு அப்படியே சற்று நகர்ந்தால் குரங்கு அருவி நமது கண்களுக்கு தென்படும்.அந்த அருவியில் சற்று காக்கா குளியல் போட்டு விட்டு மெல்ல நடையை கட்டினால் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தை வந்து சேரலாம்.

4 / 5

அங்கு, உரும்பிக் கொண்டு பயமுறுத்தும் புலியை பார்க்கும் போது, நமது அடி வயிற்றில் கண்டிப்பாக புளியை கரைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இந்தப் பகுதியானது கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளதால் குளிர்ச்சியான சூழலுடன் ரம்யமாக அமைந்திருக்கும். காலை 7 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், தமிழக வனத் துறை சார்பில் காட்டின் உள்ளே தங்குவதற்கு காட்டேஜ்கள் மற்றும் ட்ரீ ஹவுஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன.

5 / 5

இவற்றில் தங்குவதற்கு முன் கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்வது அவசியமாகும். இந்த பகுதியானது கோயம்புத்தூரில் இருந்து சுமார் 77 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வழியாக செல்லலாம். இதற்கான பயண நேரம் சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஆகும். கோடை காலத்தில் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். இதே போல, காட்டு யானைகள் சுற்றித் திரியும் காடுகளுக்குள் த்ரில்லிங்கான சுற்றுலா செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை முதல் தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

Follow Us