கொண்டை ஊசி வளைவுகள்.. குறுக்கிடும் வனவிலங்குகள்.. த்ரில்லிங்கான சுற்றுலா அனுபவம்… இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க! | TV9 Tamil News

கொண்டை ஊசி வளைவுகள்.. குறுக்கிடும் வனவிலங்குகள்.. த்ரில்லிங்கான சுற்றுலா அனுபவம்… இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

Updated On: 

20 Feb 2026 13:52 PM

 IST

Thamaraikarai Hill Tourist Spot: வனவிலங்குகள் நடமாடும் இடத்துக்கு த்ரில்லிங்கான சுற்றுலா செல்ல ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள தாமரைக்கரை மலைக்கு செல்லலாம். அங்கு பைக் ரைடுக்கு ஏற்ற கொண்டை ஊசி வளைவுகள், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன.

1 / 5தமிழகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக  வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால்,  சூரிய வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக  குளிர்ச்சியான இடங்களை  தேடி மக்கள்  படையெடுத்து  செல்ல  உள்ளனர்.  அவ்வாறு  செல்லக்கூடிய இடங்களில்  முதலில் ஞாபகத்துக்கு வருவது  கொடைக்கானல் அல்லது ஊட்டி ஆகும்.  ஆனால்,  தமிழகத்தில்  பெரிதளவில்  நமது  கவனத்திற்கு எட்டாத வகையில் பல்வேறு குளிர்ச்சியான சுற்றுலா தலங்கள்  உள்ளன.  இதில்,  ஈரோடு மாவட்டம்  அந்தியூர் அருகே உள்ள  பர்கூர்  மலைப்பகுதியில்  ரம்மியமான  இடமாக  அமைந்துள்ளது  தாமரை கரை  மலைப்பகுதி.

தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், சூரிய வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குளிர்ச்சியான இடங்களை தேடி மக்கள் படையெடுத்து செல்ல உள்ளனர். அவ்வாறு செல்லக்கூடிய இடங்களில் முதலில் ஞாபகத்துக்கு வருவது கொடைக்கானல் அல்லது ஊட்டி ஆகும். ஆனால், தமிழகத்தில் பெரிதளவில் நமது கவனத்திற்கு எட்டாத வகையில் பல்வேறு குளிர்ச்சியான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ரம்மியமான இடமாக அமைந்துள்ளது தாமரை கரை மலைப்பகுதி.

2 / 5

இந்த மலைக்கு பல்வேறு கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வகையில் இருபுறமும் மலை சிகரங்கள் அதிகமாக காணப்படும். இதனை ரசித்துக் கொண்டே மலையின் உச்சியை அடையலாம். இதில், குறிப்பாக பைக்கில் சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுலா பட்டியலில் தாமரை கரை மலைக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஏனென்றால், பைக் ரைடுக்கு தாமரைக்கரை மலை ஏற்ற இடமாகும். மேலும், செல்லும் வழியில் ஏராளமான மரங்கள் அடர்ந்து காடுகள் போல காட்சியளிப்பதாலும், அதன் உள்ளே காட்டு யானைகள் நடமாடுவதாலும் ஒரு திரில்லிங்கான பயணத்தை நமக்குத் தரும்.

3 / 5

இந்த பகுதி, எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் இருப்பதால் குளிர்ந்த வானிலைக்கு பெயர் பெற்றதாகும். மேலும், இந்த பகுதியில் காட்டு யானைகள் மட்டும் இன்றி மான்கள், கரடிகள், செந்நாய்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் காணப்படும். இதனால், இந்த பகுதியை கடந்து செல்லும்போது அடி வயிற்றில் ஒருவித அச்ச உணர்வு நம்மைப் பற்றிக் கொள்ளும். இது மகிழ்ச்சி கலந்த திரில்லிங்கான பயணத்தை நமக்கு கொடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இந்த மலையில் ட்ரெக்கிங் செல்ல விரும்பினால் ட்ரக்கிங் செல்லலாம்.

4 / 5

இதே போல, இந்த இடத்தை விட்டு பிரிய மனமில்லை என்றால், அந்தப் பகுதியில் கேம்ப் அமைத்து தங்கவும் வசதி உள்ளது. மேலும், த்ரில்லிங்கான அனுபவத்தை பெறுவதற்கு பர்கூர், தட்டக்கரை, கடம்பூர் ஆகிய உயர்ந்த மலை முகடுகளுக்கு சென்று 4 புறமும் சுற்றி இருக்கும் இயற்கையின் அழகை கண் கூறாக கண்டு ரசிக்கலாம். அல்லது அதன் அடிப்பகுதியில் இருந்து அதன் அழகை ரசித்து மகிழலாம்.

5 / 5

இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மாலை நேரங்களில் சாலை பகுதியில் நடந்து செல்வதில் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தாமரைக்கரை மலை அமைந்துள்ளது. சுமார் 1:45 மணி நேரத்தில் தாமரைக்கரை மலைப்பகுதியை அடையலாம். இங்கு, செல்வதற்கு பவானி மற்றும் அந்தியூர் வழியாக பேருந்து வசதிகள் உள்ளன.