கோடை கால சுற்றுலா செல்ல திட்டமா…நீலகிரிக்கு போய் பாருங்க..அசந்து போவீங்க! | TV9 Tamil News

கோடை கால சுற்றுலா செல்ல திட்டமா…நீலகிரிக்கு போய் பாருங்க..அசந்து போவீங்க!

Updated On: 

12 Feb 2026 13:36 PM

 IST

Summer Trip To Nilgiris : வரும் கோடை காலத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் நீலகிரிக்கு சுற்றுலா செல்லலாம். அங்கு உள்ள சுற்றுலா இடங்கள் மனதுக்கு மிகுந்த இதமளிக்கும் வகையில் இருக்கும். எனவே, சுற்று திட்டத்தில் நீலகிரிக்கும் இடம் அளிக்கலாம் .

1 / 5தமிழகத்தில் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வதற்கு பொதுமக்கள் திட்டமிட்டு வருவார்கள். அவர்கள் தமிழகத்தின் உள்ளயே சுற்றுலா செல்வதற்கு ஏதுவாக பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இதில், முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் இந்தியாவில் மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் பார்க்கும் இடமெல்லாம் பசுமை போர்த்திய புல் வெளிகள், அடர்த்தியான சோலைகள் மற்றும் எழில் கொஞ்சும் அருவிகள், சிற்றோடைகள், படர்ந்து விரிந்த தேயிலை தோட்டங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வதற்கு பொதுமக்கள் திட்டமிட்டு வருவார்கள். அவர்கள் தமிழகத்தின் உள்ளயே சுற்றுலா செல்வதற்கு ஏதுவாக பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இதில், முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் இந்தியாவில் மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் பார்க்கும் இடமெல்லாம் பசுமை போர்த்திய புல் வெளிகள், அடர்த்தியான சோலைகள் மற்றும் எழில் கொஞ்சும் அருவிகள், சிற்றோடைகள், படர்ந்து விரிந்த தேயிலை தோட்டங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

2 / 5

வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழைந்தவுடன் அங்கு வீசி வரும் பனிக்காற்று தங்களை தழுவி சென்று வரவேற்கும். இதைத் தொடர்ந்து உள்ளே சென்றால் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் ஏரியில் படகு சவாரி பயணம். தொடர்ந்து, நீலகிரி மலை ரயில் பயணமானது சுற்றுலா பயணிகள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கி வருகிறது.ரயில் பயணம் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும், ஊட்டி மலை ரயிலில் பயணிப்பது என்றால் சொல்லவா வேண்டும்.

3 / 5

அடர்ந்த காடுகளுக்கு நடுவேயும், மலைகளுக்கு நடுவேயும் ஊர்ந்து செல்லும் இந்த மலை ரயிலில் பயணிக்கும் போது மனம் அவ்வளவு லேசாக மாறிவிடும். இதன் பின்னர், நீலகிரி மாவட்டத்தில் வானில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது என்ற தத்துவத்திற்கு ஏற்ப அதன் அழகு நம்மை கொள்ளை கொள்ள செய்யும். அதிலும், தங்கத்தைப் போல விலை மதிப்பற்றதாக மாறிவரும் வெள்ளியை உருக்கி விட்டது போல, ஆகாயத்திலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியே பார்ப்பதற்கு அலாதி இன்பமாக இருக்கும்.

4 / 5

சில சுற்றுலா பயணிகளுக்கு திரில்லிங்கான மலை ஏற்றத்துக்கும் நீலகிரி மாவட்டம் சளைத்தது அல்ல. இங்கு நடைபெறும் மலை ஏற்றம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் படர்ந்து வளர்ந்து இருக்கும் பல்வேறு வகையான செடிகள், அதில் பூத்திருக்கும் பூக்கள் அனைத்தும் மனதை கொள்ளை போகச் செய்யும்.  இதே போல, இங்கு தொட்டபெட்டா சிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பூங்கா, அவலாஞ்சி ஏரி, தேயிலை அருங்காட்சியகம், கோத்தகிரி உள்ளிட்ட பொழுது போக்கும் இடங்கள் ஏராளமாக உள்ளன.

5 / 5

மொத்தத்தில் கோடை காலத்துக்கு ஏற்ற வகையில் குளிர்ச்சியான இடத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டுமானால் அதில், மறக்காமல் நீலகிரி மாவட்டத்தையும் சுற்றுலாப் பயணிகள் சேர்த்துக் கொள்ளலாம். இங்கு சென்றால் மனம் கொள்ளை போவதை தடுக்கவும் முடியாது... தவிர்க்கவும் முடியாது...!