இன்று சங்கடஹர சதுர்த்தி.. கடன் பிரச்சனை தீர வீட்டில் இதை செய்தால் போதும்!! | TV9 Tamil News

இன்று சங்கடஹர சதுர்த்தி.. கடன் பிரச்சனை தீர வீட்டில் இதை செய்தால் போதும்!!

Updated On: 

05 Feb 2026 14:29 PM

 IST

Sankatahara Chaturthi 2026: இந்த மாத சங்கடஹர சதுர்த்தி, குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில் வந்திருப்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் குரு பார்வை கிடைத்துவிட்டால், பரம ஏழையும் கூட உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மை.

1 / 5இன்று பிப்ரவரி 5, வியாழக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி என்ற மிக முக்கியமான விநாயகர் விரதம் வருகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதியில் வரும் இந்த சங்கடஹர சதுர்த்தி, வாழ்க்கையில் உள்ள அனைத்து சங்கடங்களையும் வேரோடு அகற்றும் வல்லமை கொண்டதாக சொல்லப்படுகிறது.

இன்று பிப்ரவரி 5, வியாழக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி என்ற மிக முக்கியமான விநாயகர் விரதம் வருகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதியில் வரும் இந்த சங்கடஹர சதுர்த்தி, வாழ்க்கையில் உள்ள அனைத்து சங்கடங்களையும் வேரோடு அகற்றும் வல்லமை கொண்டதாக சொல்லப்படுகிறது.

2 / 5

இந்த நாளில் விநாயகருக்கு செய்யப்படும் எந்த ஒரு எளிய வழிபாடும் கூட அபார பலனை தரும். விநாயகர் கடவுள்களில் மிக எளிமையானவர். களிமண், மஞ்சள், சந்தனம், மாட்டுசாணம் என எந்த உருவத்தில் பிடித்தாலும், அதே உருவத்தில் வந்து அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிவார்.

3 / 5

இந்த மாத சங்கடஹர சதுர்த்தி, குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில் வந்திருப்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் குரு பார்வை கிடைத்துவிட்டால், பரம ஏழையும் கூட உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மை.

4 / 5

எளிய வழிபாட்டு முறை: இன்று வீட்டின் நிலைவாசலில், ஒரு இலையின் மேல் கொண்டைக்கடலை (அல்லது தானியம்) வைத்து, மனதார விநாயகரை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் குடும்பத்துக்கே குரு பார்வை கிடைத்து, வாழ்க்கையில் நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த இலையும் தானியமும் நாள் முழுவதும் அல்லது இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பூஜை செய்யும் நேரத்தில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வைத்தாலே போதும்.

5 / 5

வழிபாட்டுக்குப் பிந்தைய நடைமுறை: மறுநாள், அந்த கொண்டைக்கடலையை காக்கைக்கு தானமாக கொடுத்து விட வேண்டும். பயன்படுத்திய இலை கால் படாதபடி செடிகளின் அடியில் அல்லது ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும். இதனை முழு நம்பிக்கையுடன் செய்தால், நல்ல பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.