பங்குனி உத்திரம் 2026.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீக பலன்களும், விளக்கமும்.. | TV9 Tamil News

பங்குனி உத்திரம் 2026.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீக பலன்களும், விளக்கமும்..

Published: 

21 Mar 2026 22:15 PM

 IST

Panguni Uthiram 2026: குலதெய்வ வழிபாடு என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; அது நமது வேர்களுடன் நம்மை இணைக்கும் ஒரு பாலமாகும். பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் ஒன்று கூடி வழிபடுவதால் குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை பலப்படும் என அறிவுறுத்துகின்றனர்.

1 / 5தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் 'பங்குனி உத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. இது தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற புனித நாளாகக் கருதப்படுகிறது. இந்த நன்னாளில் குலதெய்வத்தை வழிபடுவது கோடி புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம்.

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் 'பங்குனி உத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. இது தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற புனித நாளாகக் கருதப்படுகிறது. இந்த நன்னாளில் குலதெய்வத்தை வழிபடுவது கோடி புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம்.

2 / 5

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்: நமது முன்னோர்கள் வழிவந்த தெய்வமே குலதெய்வம் ஆகும். மற்ற தெய்வங்களை விடவும் நமக்கு முதன்மையானதும், ஆபத்துக் காலத்தில் ஓடி வந்து காப்பதும் குலதெய்வமே. "குலதெய்வம் பாதி, குரு பாதி" என்பார்கள். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளும், மந்திரங்களும் சித்தியாகும்.

3 / 5

பங்குனி உத்திரம் தினத்தன்று குலதெய்வக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் குலதெய்வம் மிகவும் சக்தியுடன் இருப்பதாகக் நம்பப்படுகிறது. அன்றைய தினம் முறையாக வழிபட்டால், குடும்பத்தில் நிலவும் தீராத பிரச்சனைகள் தீரும்.திருமணத் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் கைகூடும். வம்ச விருத்தி மற்றும் குழந்தைகளின் கல்வி மேன்மை அடையும்.

4 / 5

வழிபாட்டு முறை: பங்குனி உத்திரத்தன்று குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கீழ்க்கண்டவாறு வழிபடலாம். அதிகாலையில் நீராடி, பூஜை அறையைச் சுத்தம் செய்து, குலதெய்வத்தின் படத்திற்குப் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். ஒரு பித்தளை அல்லது மண் விளக்கில் பசு நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கும். சர்க்கரைப் பொங்கல், பாயசம் அல்லது பானகம் போன்றவற்றை படைக்கலாம்.

5 / 5

குறிப்பாகக் குலதெய்வத்திற்குப் பிடித்தமான உணவுகளைப் படைப்பது சிறப்பு. குலதெய்வத்தின் திருநாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்து, மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் மதுரை வீரன், கருப்பசாமி போன்ற தெய்வங்கள் எல்லையைக் காக்கும் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன. பங்குனி உத்திரத்தன்று இவர்களுக்குப் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபடுவது ஊருக்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதுகாப்பைத் தரும்.

Follow Us