தேகத்தை தழுவி செல்லும் மேக கூட்டம்.. பைக் பயணத்துக்கு ஏற்ற பக்காவான இடம்.. திண்டுக்கல்லில் சூப்பர் ஸ்பாட்! | TV9 Tamil News

தேகத்தை தழுவி செல்லும் மேக கூட்டம்.. பைக் பயணத்துக்கு ஏற்ற பக்காவான இடம்.. திண்டுக்கல்லில் சூப்பர் ஸ்பாட்!

Updated On: 

19 Feb 2026 14:09 PM

 IST

Pandrimalai Tourist Spot: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு இணையாக குளிர்ச்சியான சீதோஷ்ண கால நிலை உள்ள பகுதிக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் பன்றி மலை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஒன்டே ட்ரிப், குறைந்த செலவு, இடையூறின்றி தனியான சுற்றுலாவுக்கு பெயர் போனது.

1 / 5தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனால், நமது கவனத்திற்கு எட்டாத சுற்றுலா தலங்கள் அதிக அளவு உள்ளன. அதில், தற்போது பார்க்கப்போவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்றி மலை ஆகும். இந்த மலையானது திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பழனி மலை மலை தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1300 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்க பன்றிமலையானது சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் காலநிலை அதிகளவு வெப்பமும் இல்லாமல், குளிரும் இல்லாமல் சீதோஷன நிலையாக காணப்படும்.

தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனால், நமது கவனத்திற்கு எட்டாத சுற்றுலா தலங்கள் அதிக அளவு உள்ளன. அதில், தற்போது பார்க்கப்போவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்றி மலை ஆகும். இந்த மலையானது திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பழனி மலை மலை தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1300 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்க பன்றிமலையானது சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் காலநிலை அதிகளவு வெப்பமும் இல்லாமல், குளிரும் இல்லாமல் சீதோஷன நிலையாக காணப்படும்.

2 / 5

இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பன்றி மலை கிளைமேட்டுக்கு அடிமையாகி விடுவார்கள் என்றே கூறலாம். இந்த பகுதியில், சுற்றிப் பார்ப்பதற்கு பஞ்சம் இல்லாமல் ஏராளமான ஹில் வியூ பாய்ண்டுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ட்ரக்கிங் செல்ல விரும்பினால் மலையில் ட்ரக்கிங் செல்ல முடியும். இதே போல, கேம்ப் அமைத்தும் தங்கிக் கொள்ளலாம். கூட்ட நெரிசல் இன்றி தனிமையாக சுற்றுச்சூழலை கண்டு களிக்க விரும்பினால் இந்த பன்றி மலை மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

3 / 5

கொடைக்கானலில் எந்த அளவுக்கு குளிர்ச்சியான சூழல் நிலவுமோ, அதே அளவுக்கு குறைவின்றி பன்றி மலையிலும் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வரும். மேலும், இந்த பகுதியில் சிறிய அளவிலான நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள், இதமான காலநிலை, மலையின் உச்சியில் நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டங்கள் ஆகியவை நம்மை பிரம்மிப்புக்குள்ளாகும் வகையில் அமைந்திருக்கும். இதிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் சுற்றுலா செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் தங்களின் தேர்வில் முதலிடமாக இந்த பன்றி மலையை வைத்துக் கொள்ளலாம்.

4 / 5

ஏனென்றால், தனியாகவும், குழுவாகவும் பைக் பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த இடம் இதுவாகும். இந்த பன்றி மலைக்கு செல்லும் பாதையில் கொம்பை ஆணை என்ற பகுதி உள்ளது. அங்கு மழை காலங்களில் அதிக அளவு நீர் நிறைந்து காணப்படும். இதற்கு அடுத்தபடியாக பழவேலி நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் குட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

5 / 5

அங்கு, சின்னதாக குளியல் போட்டுவிட்டு வேலை சென்றால் போகும் வழியில் பலா மரங்கள், மிளகு தோட்டம், ஆரஞ்சு பழ மரங்கள், காப்பி தோட்டங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இவற்றை மனம் குளிர சுற்றி பார்க்கலாம். திண்டுக்கல்லில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பன்றிமலைக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் சென்றடையலாம். இதற்கு திண்டுக்கலில் இருந்து ஆடலூர் வழியாக செல்லலாம். மலைப்பகுதி என்பதால் பயண நேரத்தில் சிறிது நேரம் கூடுதலாக எடுக்கலாம்.