திருச்சிக்கு அருகே “குட்டி ஊட்டியா”…பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா தளம்..வெறும் 3 மணி நேர பயணம் தான்! | TV9 Tamil News

திருச்சிக்கு அருகே “குட்டி ஊட்டியா”…பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா தளம்..வெறும் 3 மணி நேர பயணம் தான்!

Updated On: 

13 Feb 2026 12:38 PM

 IST

Pachamalai Tourist Spot: திருச்சி மாவட்டத்தில் குட்டி ஊட்டி என்று அழைக்கப்படும் பச்சை மலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹில் வியூ பாயிண்டுகள், நீர் வீழ்ச்சிகள், டிரெக்கிங் பாதைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்தப் பகுதிக்கு சுமார் 3 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.

1 / 5தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஹைடன் சுற்றுலாத்தளங்கள் இருந்து வருகிறது. இந்த சுற்றுலாத்தளங்கள் பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி என்ற கிராமத்தில் ஏரி சார்ந்த பகுதி மினி ஐஸ்லாண்டுக்கு ஈடாக இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் தங்கபாண்டியன் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஹைடன் சுற்றுலாத்தளங்கள் இருந்து வருகிறது. இந்த சுற்றுலாத்தளங்கள் பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி என்ற கிராமத்தில் ஏரி சார்ந்த பகுதி மினி ஐஸ்லாண்டுக்கு ஈடாக இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் தங்கபாண்டியன் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

2 / 5

இந்த நிலையில், இதே போல, திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பச்சை மலை அமைந்துள்ளது.இந்த பச்சைமலை ஆனது திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தொட்டியம் பகுதியில் வருகிறது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2, 400 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இங்கு, 19,076 ஹெக்டர் பரப்பளவில் அடர்ந்த மரங்கள், மூலிகை வாசனை மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய சூழல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

3 / 5

இந்த பகுதி முழுவதும் பச்சை வண்ண போர்வையை போர்த்தியது போல செடி கொடிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், 154- க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அந்த பகுதியில் வசித்து வருவதால், காதுகளில் தேன் வந்து பாயும் அளவுக்கு பறவைகளின் கூக்குரல் ஓசைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். இது மட்டுமின்றி, அந்தப் பகுதியில் உள்ள கோரையாறு, மங்களம் அருவி, மயில் ஊற்று ஆகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதில், அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு ஆகாயத்தில் இருந்து நீர் கொட்டும்.

4 / 5

இதில், சுற்றுலாப் பயணிகள் உச்சி முதல் பாதம் வரை குளிரும் அளவுக்கு குத்தாட்டம் போட்டு குளிக்கலாம்.இதற்கு அடுத்தபடியாக, ஊட்டி மற்றும் கொடைக்கானலில் காணப்படும் ஹில் வியூ பாய்ண்டுகள் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.இங்கு நின்று கொண்டு பச்சை மலையின் அழகை கண் கூறாக ரசித்துப் பார்க்க முடியும். மேலும்,  திரில்லிங்கான அனுபவத்துக்கு டிரெக்கிங் பாதைகளும் உள்ளன. இவ்வளவு சுற்றுலா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் ஏங்கும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதிகளும் சுற்றுலாத் துறை சார்பில் அங்கு செய்யப்பட்டுள்ளன.

5 / 5

மொத்தத்தில் இந்த பச்சை மலை குட்டி ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இறுதியில் இந்த பச்சை மலைக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருப்பர். உங்கள் மனதில் எப்படி செல்லவேண்டும் என்ற கேள்வியும் எழுந்திருக்கும். இந்த பச்சை மலைக்கு  திருச்சியில் இருந்து சுமார் 70 முதல் 80 கிலோ மீட்டர் தொலைவில் 3 மணி நேர பயணத்தில் செல்ல முடியும்.

Follow Us