Neyveli Constituency Election 2026: தொழிற்சாலை நகரமாக இருக்கும் நெய்வேலி.. மக்களின் ஆதரவு யாருக்கு? | TV9 Tamil News

Neyveli Constituency Election 2026: தொழிற்சாலை நகரமாக இருக்கும் நெய்வேலி.. மக்களின் ஆதரவு யாருக்கு?

Published: 

17 Apr 2026 13:12 PM

 IST

நெய்வேலி சட்டமன்ற தொகுதி என்பது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பொதுத் தொகுதியாக பார்க்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மறுவரையறைக்கு பிறகு உருவாக்கப்பட்ட தொகுதியாகவும், இது கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி சட்டமன்ற தொகுதி ஒரு தொழிற்சாலை நகரமாகும்.

1 / 6நெய்வேலி சட்டமன்ற தொகுதி என்பது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பொதுத் தொகுதியாக பார்க்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மறுவரையறைக்கு பிறகு உருவாக்கப்பட்ட தொகுதியாகவும், இது கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது.  இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி சட்டமன்ற தொகுதி ஒரு தொழிற்சாலை நகரமாகும்.

நெய்வேலி சட்டமன்ற தொகுதி என்பது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பொதுத் தொகுதியாக பார்க்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மறுவரையறைக்கு பிறகு உருவாக்கப்பட்ட தொகுதியாகவும், இது கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி சட்டமன்ற தொகுதி ஒரு தொழிற்சாலை நகரமாகும்.

2 / 6

நெய்வேலியில் முக்கியமாக லிக்னைட் சுரங்கம், மின்சார உற்பத்தி, NLC India Limited போன்றவை இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. எனவே இது ஒரு முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் கலவையாக உள்ளனர்.

3 / 6

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் 75,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஜெகன் 74,200 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

4 / 6

நெய்வேலி சட்டமன்ற தொகுதி திமுகவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், திமுக மற்றும் அதிமுக இடையே இந்த தொகுதியில் போட்டி கடுமையாக உள்ளது. இந்த தொகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், வேலைவாய்ப்பு, மின்சாரம், தொழிலாளர் பிரச்சினைகள் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

5 / 6

இந்த தொகுதி நகர மற்றும் கிராமப்புறங்களை கலவையாக கொண்டதாகும். 2026ஆம் ஆண்டு தேர்தலை எடுத்துக் கொண்டால், திமுக தரப்பில் மீண்டும் சபா ராஜேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன், தமிழக வெற்றி கழகம் சார்பில் கே. ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் வீரமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

6 / 6

அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி இருந்தாலும், மக்களுக்கான வாக்குறுதிகள் மற்றும் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அதனைப் பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த முறை புதிதாக தமிழக புரட்சி கழகம் களத்தில் இருப்பதால், வாக்கு வங்கி சிதறக்கூடும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

Follow Us