மாசி வளர்பிறை சஷ்டி: விரதம், வழிபாட்டு முறைகளும், பலன்களும்.. | TV9 Tamil News

மாசி வளர்பிறை சஷ்டி: விரதம், வழிபாட்டு முறைகளும், பலன்களும்..

Published: 

21 Feb 2026 15:48 PM

 IST

Masi Valarpirai sashti: செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மற்றும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த விரதம் ஒரு சிறந்த தீர்வாகும். விரதத் தேதி மற்றும் நேரம்: சஷ்டி திதியானது முந்தைய நாள் மாலையிலேயே தொடங்கிவிடுவதால், பிப்ரவரி 22 அதிகாலை முதல் விரதத்தைத் தொடங்குவது உகந்தது.

1 / 5முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் மிக முக்கியமானது சஷ்டி விரதம். "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, குழந்தை வரம் தரும் அற்புத விரதமாக இது போற்றப்படுகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு மாசி மாதத்தில் நாளை (பிப்.22) வளர்பிறை சஷ்டி விரத தினம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி சிறப்பு வாய்ந்தது என்றாலும், மாசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டிக்குத் தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் முருகனை மனமுருகி வேண்டுபவர்களுக்குத் தீராத வினைகள் தீரும், நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் மிக முக்கியமானது சஷ்டி விரதம். "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, குழந்தை வரம் தரும் அற்புத விரதமாக இது போற்றப்படுகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு மாசி மாதத்தில் நாளை (பிப்.22) வளர்பிறை சஷ்டி விரத தினம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி சிறப்பு வாய்ந்தது என்றாலும், மாசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டிக்குத் தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் முருகனை மனமுருகி வேண்டுபவர்களுக்குத் தீராத வினைகள் தீரும், நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

2 / 5

குறிப்பாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மற்றும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த விரதம் ஒரு சிறந்த தீர்வாகும். விரதத் தேதி மற்றும் நேரம்: சஷ்டி திதியானது முந்தைய நாள் மாலையிலேயே தொடங்கிவிடுவதால், பிப்ரவரி 22 அதிகாலை முதல் விரதத்தைத் தொடங்குவது உகந்தது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் (பிரம்ம முகூர்த்தம்) எழுந்து நீராடிவிட்டு, தூய ஆடைகளை அணிய வேண்டும். பூஜை அறையில் முருகப்பெருமானின் படம் அல்லது சிலைக்கு வாசனையுள்ள மலர்களால் (குறிப்பாகச் செவ்வரளி) அலங்காரம் செய்ய வேண்டும்.

3 / 5

மந்திர பாராயணம்: அன்று நாள் முழுவதும் முருகனின் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம்: இதனை அன்றைய தினம் குறைந்தது 2 முறையாவது பாராயணம் செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. சண்முக கவசம்: பகை மற்றும் பயம் நீங்க இதனை ஓதலாம். ஓம் சரவணபவ: இந்த ஆறு எழுத்து மந்திரத்தை 108 முறை ஜபிப்பது விசேஷம். முருகனுக்கு உகந்த பால், பழங்கள், கற்கண்டு அல்லது சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாகப் படைக்கலாம்.

4 / 5

உணவு முறைகள்: உடல்நிலை சீராக உள்ளவர்கள் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கலாம். இயலாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் உண்டு விரதம் இருக்கலாம். ஒருவேளை மட்டும் உணவு உண்பவர்கள் மதிய உணவைத் தவிர்த்து, இரவில் எளிய உணவை (உப்பு சேர்க்காத உணவு சிறந்தது) எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, விரத காலத்தில் அசைவம், வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

5 / 5

விரதத்தின் பலன்கள்: நீண்ட நாட்களாகக் குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களை அறியாமல் உங்களுக்கு வரும் எதிர்ப்புகள் மற்றும் கண் திருஷ்டிகள் விலகும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம், வேலை வாய்ப்பு மற்றும் வீடு கட்டும் பணிகள் தடையின்றி நடக்கும். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவெடுக்கும் ஆற்றல் பிறக்கும்.