குளிர்ச்சியான மலை பிரதேசம்.. கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்.. 3500 அடி உயரத்தில் ரம்மியமாக காட்சியளிக்கும் சுற்றுலா தலம்! | TV9 Tamil News

குளிர்ச்சியான மலை பிரதேசம்.. கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்.. 3500 அடி உயரத்தில் ரம்மியமாக காட்சியளிக்கும் சுற்றுலா தலம்!

Updated On: 

23 Feb 2026 14:18 PM

 IST

Manjolai Tourist Spot: தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், குளிர்ச்சியான மலை பிரதேசமாகவும் விழங்குவது நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை சுற்றுலா தலமாகும். இங்கு நீர்வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான சுற்றி பார்ப்பதற்கான இடங்கள் உள்ளன.

1 / 5திருநெல்வேலி  மாவட்டம் என்றாலே  அனைவரது  நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான்.  அப்படி அல்வா தயாரிக்கும் மாவட்டத்தில்  அல்வா போன்று தித்திப்பை அளிக்கும் வகையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன.  அதில்,  முக்கிய பங்கு வைப்பது  மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள மாஞ்சோலை  பகுதியாகும்.  கடல் மட்டத்தில் இருந்து  சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடமானது  குளிர்ச்சியான காலநிலை மற்றும் இயற்கை சார்ந்த சூழலுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.இந்த பகுதியில்  ஏராளமான தேயிலை தோட்டங்கள்,  மாஞ்சோலைகள்,  நாலு முக்கு,  ஊத்து  மற்றும்  கக்காச்சி  பகுதிகளில்  எஸ்டேட்டுகள்  அமைந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். அப்படி அல்வா தயாரிக்கும் மாவட்டத்தில் அல்வா போன்று தித்திப்பை அளிக்கும் வகையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அதில், முக்கிய பங்கு வைப்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடமானது குளிர்ச்சியான காலநிலை மற்றும் இயற்கை சார்ந்த சூழலுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.இந்த பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள், மாஞ்சோலைகள், நாலு முக்கு, ஊத்து மற்றும் கக்காச்சி பகுதிகளில் எஸ்டேட்டுகள் அமைந்துள்ளன.

2 / 5

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடங்களை சுற்றி பார்த்தால் இதன் அழகில் மயங்குவது உறுதி. அந்த அளவுக்கு இந்த பகுதியானது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். நாலாபுரமும் படர்ந்து பச்சை வண்ண நிறத்தில் தேயிலைத் தோட்டங்கள் காணப்படும். இதன் அழகை ரசித்து விட்டு கூதிரவெட்டி பகுதிக்கு சென்றால் அங்கிருக்கும் வியூ பாய்ண்டில் நின்று கொண்டு மாஞ்சோலையின் மொத்த அழகையும் கண்டு ரசிப்பதற்கு நம் இரு கண்கள் போதாது என்றே கூறலாம். இதை பார்த்துவிட்டு சற்று கீழே இறங்கினால் மேல் கோதையாறு அணை அம்சமாக அமைந்திருக்கும்.

3 / 5

இந்த அணையில் கடல் போல தேங்கி இருக்கும் நீரை பார்க்கும்போது நம் மனது வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்ச்சியை அடையும். அப்படியே காலாற நடந்து சென்றால் இயற்கையோடு இணைந்தது போன்ற இன்பத்தை அடையலாம்.இதேபோல, அந்தப் பகுதியில் ஏராளமான நீர் வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக அதே பகுதியில் பிரபலமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறையிடம் முறையான முன் அனுமதியை சுற்றுலா பயணிகள் பெற வேண்டும்.

4 / 5

இந்த அனுமதியை பெற்ற பிறகு மணிமுத்தாறு அணை வழியாக மலைப்பாதையில் பயணித்தால் மேற்கண்ட இடத்தை சென்றடையலாம். இதற்கு தினந்தோறும் காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றன. இதில், ஒரு நாளைக்கு சுமார் 10 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதற்கான அனுமதியை மணிமுத்தாறு சோதனை சாவடி மற்றும் அம்பாசமுத்திரம் வன அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

5 / 5

இந்த பகுதியில் அரிக்கொம்பன் என்ற யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு பல்வேறு கொண்டை ஊசிகள் கடந்து மணிமுத்தாறு வழியாக செல்ல வேண்டும். குளிர்ச்சியான மலைப்பிரதேசத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் இந்தப் பகுதிக்கு செல்லலாம்.