ஆதார் விவரங்களை பத்திரமாக லாக் செய்யலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ! | TV9 Tamil News

ஆதார் விவரங்களை பத்திரமாக லாக் செய்யலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Published: 

04 Feb 2026 12:16 PM

 IST

How To Lock Aadhaar Biometric Information | ஆதாரில் உள்ள விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் மோசடிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே ஆதார் விவரங்களை லாக் செய்து, மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5இந்திய பொதுமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் முதியோர் உதவித்தொகை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் முக்கிய ஆவணமாக கோரப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஆதார் கார்டை ஆவணமாக வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்திய பொதுமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் முதியோர் உதவித்தொகை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் முக்கிய ஆவணமாக கோரப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஆதார் கார்டை ஆவணமாக வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

2 / 5

ஆதார் கார்டில் 12 இலக்க எண், பெயர், முகவரி, பாலினம், கை ரேகை, கண் ரேகை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இத்தகைய முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ள ஆதார் கார்டை பல்வேறு இடங்களில் சம்பர்ப்பிக்கும் போது அதில் உள்ள விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

3 / 5

இவ்வாறு ஆதார் விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க உள்ள ஒரு அம்சம் தான் ஆதார் லாக். இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை சுலபமாக லாக் செய்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் அனுமதி இன்றி வேறு யாரும் உங்கள் ஆதார் விவரங்களை பயன்படுத்த முடியாது. 

4 / 5

இவ்வாறு நீங்கள் ஆதார் விவரங்களை லாக் செய்யும் பட்சத்தில் விர்சுசல் ஐடியை பயன்படுத்தலாம். விர்சுவல் ஐடி என்பது ஆதார் உடன் இணைக்கப்பட்ட தற்காலிக 16 இலக்க எண் ஆகும். இதனை ஆக்டிவேட் செய்ய ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI-க்கு செல்ல வேண்டும். 

5 / 5

அங்கு கொடுக்கப்பட்டுள்ள எனது ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உள்ள ஆதார் லாக் அல்லது அன்லாக் என்று உள்ள ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்கள் ஆதார் எண், முழுப் பெயர் மற்றும் பின் கோடை பதிவிட வேண்டும். இதற்கு பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட்டு மிக சுலபமாக உங்கள் ஆதார் விவரங்களை லாக் செய்துக்கொள்ளலாம்.