2026ல் வெளியாகும் நயன்தாராவின் 6 படங்கள் – என்னென்ன தெரியுமா? | TV9 Tamil News

2026ல் வெளியாகும் நயன்தாராவின் 6 படங்கள் – என்னென்ன தெரியுமா?

Updated On: 

31 Jan 2026 22:49 PM

 IST

Nayanthara’s Upcoming Film : லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் சினிமாவில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். இந்த 2026ல் அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஆறு படங்கள் குறித்து பார்க்கலாம்.

1 / 6முதலில் டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடித்துள்ள பான் இந்தியன் படத்தில் நயன்தாரா, கங்கா என்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் 19, 2026 அன்று வெளியாகிறது.

முதலில் டாக்சிக். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடித்துள்ள பான் இந்தியன் படத்தில் நயன்தாரா, கங்கா என்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் 19, 2026 அன்று வெளியாகிறது.

2 / 6

அடுத்ததாக பேட்ரியாட். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ளனர். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் வருகிற மார்ச் 23, 2026 அன்று வெளியாகிறது.

3 / 6

அடுத்ததாக நயன்தாரா நடித்துள்ள படம் டியர் ஸ்டூடண்ட்ஸ். ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் இயக்கியுள்ள இந்த மலையாள படம் ஆக்ஷன் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் வருகிற கோடைகாலத்தில் வெளியாகிறது.

4 / 6

மூக்குத்தி அம்மன் பட வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள படம் தான் முக்குத்தி அம்மன் 2. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற கோடைகாலத்தில் வெளியாகிறது.

5 / 6

கவினுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள படம் ஹை. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகாரஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 / 6

கடைசியாக நயன்தாரா நடிப்பில் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள படம் மண்ணாங்கட்டி. டூட் விக்கி இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகிறது. 6