Janhvi Kapoor: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்! | TV9 Tamil News

Janhvi Kapoor: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!

Updated On: 

06 Mar 2026 17:16 PM

 IST

Janhvi Kapoors Glowing Skin Secret: பான் இந்திய இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்துவருபவர் நடிகை ஜான்வி கபூர். எப்போதும் முக பளபளப்புடன் காணப்பட்டுவரும் இவர், நேர்காணல் ஒன்றில் தனது முக பளபளப்பிற்காக செய்யும் பியூட்டி சீக்ரட் குறித்து தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

1 / 6பாலிவுட் சினிமாவில் லீட் கதாநாயகியாக பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்துவருபவர் நடிகை ஜான்வி கபூர். இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியிலும் படங்கள் வெளியாகிவருகிறது. நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் என்ற நிலையில், இவருக்கு தமிழில் மக்கள் மத்தியில் பிரபலம் இருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் லீட் கதாநாயகியாக பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்துவருபவர் நடிகை ஜான்வி கபூர். இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியிலும் படங்கள் வெளியாகிவருகிறது. நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் என்ற நிலையில், இவருக்கு தமிழில் மக்கள் மத்தியில் பிரபலம் இருக்கிறது.

2 / 6

தொடர்ந்து இந்தி சினிமாவில் வருண் தவான் முதல் சித்தார்த் மல்கோத்ரா வரை பல்வேறு நடிகர்களுடன் படங்களில் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் தெலுங்கில் தற்போது பெடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கிவருகிறார்.

3 / 6

இந்த பெடி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர், நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த் படமானது முற்றிலும் ஆக்ஷ்ன், காமெடி மற்றும் கிரிக்கெட் போன்ற கதைகளை மையமாக கொண்டு தயாராகியுள்ளது. இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

4 / 6

நடிகை ஜான்வி கபூர் அப்படியே அவரின் தாய் ஸ்ரீதேவியை போலவே மிகவும் அழகானவர் மற்றும் தன்மையானவரும் கூட. இவரின் சிறுவயதில் இவர் அதிக எடை இருந்த நிலையில், தற்போது டயட் மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார். மேலும் இவர் தனது முகம் பளபளக்க என்ன பியூட்டி சீக்ரட் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

5 / 6

நடிகை ஜான்வி கபூர், தான் எப்போதாவது, வியர்வையுடனும், அழுக்காக இருப்பதுபோல் உணர்ந்தாள், உடனே வெதுவெதுப்பான நீரில் குளிப்பேன். அப்போதுதான் முக துவாரங்கள் திறக்கும். எனது முகத்திற்கு எப்போதும் இயற்கையான விஷயங்களையே பயன்படுத்துவதற்கே அதிகம் விரும்புவேன். அதுதான் நல்ல விஷயம்

6 / 6

எனது முகத்திற்கு குறிப்பாக பால், தேன், மலாய், யோகர்ட் மற்றும் பழங்களின் சாரையும் பயன்படுத்துவேன். இது மிகவும் இயற்கையானது என்ற நிலையில், முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். மேலும் நான் உறங்குவதற்கு முன் எனது முகத்தில் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் பயன்படுத்துவேன், இதுவே அனைத்து பளபளப்பான முகத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

Follow Us