TV9 Tamil NewsPhoto Gallery > Google Pixel 9 and 10 Gets Huge Discounts In Google Year End Sale 2025 Photo Gallery
கூகுள் பிக்சல் 9, 10 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ரூ.20,000 வரை சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!
Google Pixel 9 and 10 Gets Huge Discounts | கூகுள் நிறுவனம் தனது ஆண்டு இறுதி சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் கூகுள் பிக்சல் 9 மற்றும் கூகுள் 10 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஆண்டு இறுதி சேலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கூகுள் நிறுவனமும் தனது ஆண்டு இறுதி சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் 2025-ல் தனது கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், கூகுள் ஆண்டு இறுதி சேலில் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சீரீஸில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இது பொருந்தும்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல், பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களை எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி மாத தவணை முறையில் வாங்கும்போது ரூ.7,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
கூகுள் பிக்சல் 9 மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த கூகுள் ஆண்டு இறுதி சேலில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கூகுள் சேலில் வெறும் ரூ.58,399-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.21,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதேபோல கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு, பிக்சல் 9 ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,72,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு ஸ்மார்ட்போன் ரூ.1,62,999-க்கும், ரூ.44,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 9 ஏ ஸ்மார்ட்போன் ரூ.44,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.