திமுக – இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது – மு.க.ஸ்டாலின் பேச்சு | TV9 Tamil News

திமுக – இஸ்லாமியர் உறவை யாராலும் பிரிக்க முடியாது – மு.க.ஸ்டாலின் பேச்சு

Published: 

15 Mar 2026 21:09 PM

 IST

MK Stalin : சென்னை அமைந்தகரையில் நடைபெறும் இப்தார் நோன்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றார். நிகழ்வில் பேசிய முதல்வர், திமுவையும் இஸ்லாமியரையும் யாராலும் பிரிக்க முடியாது என்று பேசினார். அவர் பேசியது குறித்து பார்க்கலாம்.

1 / 5சென்னை அமைந்தகரையில் நடைபெறும் இப்தார் நோன்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றார். இந்த நிலையில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகழ்வில் பேசிய அவர், புனித ரமலான் மாதத்தில் திமுக சிறுபான்மை பிரிவு நடத்தும் ஈகை பெருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்று பேசினார்.

சென்னை அமைந்தகரையில் நடைபெறும் இப்தார் நோன்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றார். இந்த நிலையில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகழ்வில் பேசிய அவர், புனித ரமலான் மாதத்தில் திமுக சிறுபான்மை பிரிவு நடத்தும் ஈகை பெருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்று பேசினார்.

2 / 5

மேலும் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும் திமுகவினருக்குமான தொடர்பு தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்றார்.

3 / 5

ஈகை பண்பும் அடுத்தவருக்கு உதவக் கூடிய மனமும், அனைவரையும் சமமாக கருதி அன்பு செலுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்றார்.

4 / 5

பெண்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள் தான் என்றார்.

5 / 5

அனைவரையும் சமமாக பாவிக்கும் எண்ணம் கொண்ட தூய இஸ்லாமியர்கள் கூடி இருக்கின்றனர். அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இஸ்லாமிய இயக்கங்களின் ஒற்றுமை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அவசியம். இஸ்லிமியர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. என்று பேசினார்.

Follow Us