UAN இல்லாமே பிஎஃப் பேலன்ஸ் செக் செய்ய முடியும்.. எப்படி தெரியுமா? | TV9 Tamil News

UAN இல்லாமே பிஎஃப் பேலன்ஸ் செக் செய்ய முடியும்.. எப்படி தெரியுமா?

Published: 

10 Mar 2026 17:04 PM

 IST

Check Provident Fund Balance Without UAN | பெரும்பாலானவர்கள் யுஏஎன் எண் இல்லை என்றால் பிஎஃப் பேலன்ஸ் செக் செய்ய முடியாது என நினைக்கின்றனர். இந்த நிலையில், யுஏஎன் எண் இல்லாமல் பிஎஃப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5ஊழியர் வாருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அந்த பணத்தை ஊழியர்கள் ஆன்லைன் மூலமாகவே எடுத்துக்கொள்ள முடியும். 

ஊழியர் வாருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அந்த பணத்தை ஊழியர்கள் ஆன்லைன் மூலமாகவே எடுத்துக்கொள்ள முடியும். 

2 / 5

பிஎஃப் பேலன்ஸ் செக்ஸ் செய்வது, பணத்துக்காக விண்ணப்பிப்பது அனைத்துமே ஆன்லைன் மூலம் செய்ய முடியும். ஆனால், அவற்றை செய்வதற்கு யுஏஎன் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், யுஏஎன் எண் இல்லாமலே பிஎஃப் பேலன்ஸை செக் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. 

3 / 5

யூஏஎன் உதவி இல்லாமல் உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பேலன்ஸ் குறித்து ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் நீங்கள் சுலபாக தெரிந்துக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட உங்களது மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். 

4 / 5

இந்த எண்ணுக்கு கால் செய்யும்போது அது தானாகவே துண்டிக்கப்படும். அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு உங்களது பிஎஃப் கணக்கு குறித்து அனைத்து முக்கிய தகவல்களும் வந்துவிடும். அதாவது, பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது, மெம்பர் ஐடி, கடைசி டெபாசிட் எவ்வளவு மற்றும் மொத்த இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்த அனைத்து தகவல்களும் வந்துவிடும். 

5 / 5

இந்த முறையில் பிஎஃப் பேலன்ஸை தெரிந்துக்கொள்ள உங்களது யுஏஎன் எண் கட்டாயம் இல்லை என்றாலும் உங்களது யுஏஎன் எண் ஆக்டிவாக இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை உங்களது யுஏஎன் எண் ஆக்டிவாக இல்லை என்றால் இந்த முறையை பயன்படுத்தி உங்களால் பிஎஃப் பேலன்ஸ் தெரிந்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us