National Handloom Day 2025: தேசிய கைத்தறி தினம் இன்று..! இது ஏன் கொண்டாடப்படுகிறது..?

India's Handloom Industry: இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்படும் தேசிய கைத்தறி தினம், கைத்தறித் தொழிலின் முக்கியத்துவத்தையும், நெசவாளர்களின் பங்களிப்பையும் போற்றும் நாளாகும். அதன்படி கைத்தறித் தொழில், வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு, பெண்களுக்கு சுய தொழில் முனைவோராக மாற வாய்ப்பளிக்கிறது.

National Handloom Day 2025: தேசிய கைத்தறி தினம் இன்று..! இது ஏன் கொண்டாடப்படுகிறது..?

தேசிய கைத்தறி தினம்

Updated On: 

07 Aug 2025 10:16 AM

தமிழ்நாடு (Tamil Nadu) மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கைத்தறித் தொழில் (Handloom) மிக முக்கியமான தொழில் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதன்படி, உலகம் முழுவதும் கைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியாவில் (India) தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. கைத்தறி ஒரு தொழிலாக மட்டுமின்றி, கலாச்சார பாரம்பரியமாகவும், நமது அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதன் மூலம், கைத்தறி தொழிலில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது, கைவினைஞர்களின் நிலையும் மேம்பட்டு வருகிறது.

பெண்களுக்கு வேலை வாய்ப்பு:

கைத்தறி தொழில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பெண்களை தொழில் முனைவோர்களாகவும், சுயசார்புடையவர்களாகவும் மாற்றுக்கிறது. தமிழ்நாட்டின் காஞ்சிவரம், ஆந்திராவின் கலம்காரி, குஜராத்தின் பந்தனி, மகாராஷ்டிராவின் பைத்தானி, மத்தியப் பிரதேசத்தின் சந்தேரி, பீகாரின் பாகல்புரி பட்டு போன்றவை உலகம் முழுவதும் கைத்தறிக்கு பெயர் பெற்றவை.

ALSO READ: மழைக்காலத்தில் துணிகளில் துர்நாற்றமா? ஈசியா போக்க 3 டிப்ஸ்!

கைத்தறி வரலாறு:

கடந்த 1905ம் ஆண்டு வங்காள பிரிவினை லார்ட் கர்சன் அறிவித்தார். அப்போது, கொல்கத்தாவின் டவுன் ஹாலில் ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்துடன் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நாளை ஆகஸ்ட் 7, 2015 அன்று தொடங்கினார். அப்போதிருந்து, இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 11வது கைத்தறி தினம் ஆகஸ்ட் 7, 2025 அன்று கொண்டாடப்படுகிறது.

கைத்தறி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது..?


கைத்தறி தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்துவதாகும். இது தவிர, நெசவாளர் சமூகத்தை கௌரவிப்பதற்கும், இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. கைத்தறி பொருட்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையையும், வெளிநாடுகளையும் சென்றடைவது மிகவும் முக்கியம். இது இந்தியாவுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நெசவாளர் சமூகங்கள் முன்னேற ஒரு வாய்ப்பையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

ALSO READ: துணிகள் பளபளப்பாக இருக்க வேண்டுமா? துவைக்கும்போது வினிகரை டிரை பண்ணி பாருங்க!

நெசவாளர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு:

கைத்தறி நெசவாளர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது. அதன்படி, நெசவாளர்களிடமிருந்து ரூ.238 பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. நெசவாளர் இறந்தால், குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.