Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனைவி செய்த கொடூரம்.. 36 முறை பீர் பாட்டிலால் கணவர் குத்திக் கொலை.. பகீர் பின்னணி!

Crime News : மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவி தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து, கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். கணவரை, 36 முறை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால், கணவரை கொன்றதாக கூறப்படுகிறது.

மனைவி செய்த கொடூரம்.. 36 முறை பீர் பாட்டிலால் கணவர் குத்திக் கொலை.. பகீர் பின்னணி!
மாதிரிப்படம்Image Source: Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Apr 2025 10:08 AM

மத்திய பிரதேசம், ஏப்ரல் 18: மத்திய பிரதேசத்தில் கணவரை, நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை 36 முறை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (25). இவருக்கு இவரது மனைவிக்கு சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டுள்ளதாக தெரிகிறது.

மனைவி செய்த கொடூரம்

இதனால், ராகுல் மீது அவரது மனைவி கோபத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரை கொலை செய்ய அந்த பெண் திட்டமிட்டிருக்கிறார். இதுகுறித்து தனது இரு நண்பர்களிடமும் கூறி உள்ளார். நண்பர்களின் உதவியுடன் ராகுலை கொலை செய்ய அந்த பெண் திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி, சம்பவத்தன்று, ராகுல் தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்றிருந்தார். ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மடக்கி பிடித்தனர். ராகுலை இரண்டு நபர்கள் தரதரவென இழுத்து சென்றனர்.

அங்கு மனைவி கண்முன்னே, இருநபர்கள் ராகுலை கொடூரமாக தாக்கினர். மேலும், அந்த பெண்ணும் ராகுலை தாக்கி இருக்கிறார். மேலும், அந்த பெண்ணின் நண்பர்கள் இருவரும், ராகுலை பீர் பாட்டிலால் 36 முறை குத்திக் கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து, ராகுலில் உடலை அருகில் உள்ள வயலில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

36 முறை பீர் பாட்டிலால் கணவர் குத்திக் கொலை

இதற்கிடையில், 2025 ஏப்ரல் 13ஆம் தேதி ராகுலின் உடலை பார்த்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராகுலின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது, ராகுல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதே நேரத்தில், ராகுலின் மனைவியும் காணாமல் போனது போலீசார் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, போலீசார் ராகுலின் மனைவியை தேடினர். தீவிர விசாரணைக்கு பிறகு, ராகுலின் மனைவி மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, ராகுலை கொலை செய்தது ஒப்புக் கொண்டனர். இதனை அடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கணவரை நண்பர்களின் உதவியுடன் மனைவி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, 36 முறை கணவரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்துள்ளார்.  நாட்டில் கொலை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாத நபர்களே விட, நெருக்கமானவர்கள் கூட கொலை குற்றத்தில் ஈடுபடுகின்றனர்.  கொலை சம்பவங்களை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடுமையாக சட்டத்தை கொண்டு வருகின்றன. இருப்பினும் தொடர்ந்து நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?...
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?...
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?...
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை...
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!...
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்......
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!...
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?...
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்...