Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?! துணை ஜனாதிபதி கேள்வி

Vice President Dhankhar Questions: தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதி 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை அடுத்து, "ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?" என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?! துணை ஜனாதிபதி கேள்வி
உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த துணை ஜனாதிபதிImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 17 Apr 2025 22:40 PM

டெல்லி ஏப்ரல் 17: உச்சநீதிமன்றம், (Supreme Court) தமிழக அரசு (Tamil Nadu government) தாக்கல் செய்த வழக்கில், ஆளுநரின் மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி (President) முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் (Vice President Jagdeep Dhankhar) கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், “உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது” எனக் கூறினார். மேலும், “ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றும் தெரிவித்தார். அவர், “பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக மாறிவிட்டது” எனக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, சட்டம் இயற்றும் உரிமை நீதிபதிகளுக்கு இல்லை என விளக்கினார்.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடும் எதிர்ப்பு

இந்த நிலையில், துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவரான ஜக்தீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், “உச்சநீதிமன்றம் தற்போது சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசுத் தலைவர் ஒரு நீதிமன்ற உத்தரவை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட முடியாது,” என்றார்.

ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணை

தனது உரையின் போது, உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை சுட்டிக்காட்டிய ஜக்தீப் தன்கர், “அரசியலமைப்பின் பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப் போல ஆகிவிட்டது. நீதிபதிகள் சட்டம் இயற்றுவார்கள், நிர்வாகத்தில் தலையிடுவார்கள், இது நாடாளுமன்றத்தின் பணியாகும். நீதிமன்றம் ஒரு சூப்பர் பார்லிமென்ட் போல செயல்படுகிறது,” எனக் கூறினார்.

நாட்டின் ஜனாதிபதிக்கே உத்தரவிட முடியுமா? ஜக்தீப் தன்கர்

அதோடு, “நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது ஒருவரின் பொறுப்பு. ஆனால், ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலைமை சட்டப்படி அனுமதிக்கக்கூடியதல்ல. நீதிபதிகள் எந்த பொறுப்பும் ஏற்காமல் சட்டத்தை நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சட்டபூர்வமாக செயல்விளைவுகளை எதிர்கொள்கின்ற நிலை இல்லை,” என்றார்.

சட்டபிரிவு 145(3) மட்டும் நீதிபதிகளின் உரிமை:ஜக்தீப் தன்கர்

சட்டப்பூர்வமான முறையில், நீதிபதிகள் செயல் புரியும் ஒரே உரிமை அரசமைப்பின் பிரிவு 145(3)-ஐ விளக்குவதாகவே இருக்க முடியும் என அவர் வலியுறுத்தினார். மேலும், அந்தச் சூழலில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட நீதிபதிகள் அமரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அவசியம்:ஜக்தீப் தன்கர்

ஜக்தீப் தன்கர் தனது பேச்சின் முடிவில், “நாட்டின் ஜனநாயக அமைப்பை எப்போதும் பாதுகாத்துள்ளோம். குடியரசுத் தலைவர் போன்ற உயரிய பதவிக்குச் சுயாதீன நிலை வேண்டும். நீதிமன்றம் இந்த நிலைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது,” என்று கூறினார். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து துணை ஜனாதிபதி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !...
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!...
மே 5 ஆம் தேதியை "வர்த்தகர்கள் நாள்" ஆக அறிவித்தார் முதல்வர்
மே 5 ஆம் தேதியை
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்...
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு...
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் எப்போது தொடங்கும்?...
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்
சிம்புவின் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனா? இயக்குநர் விளக்கம்...
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?
தவெக தொண்டரின் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர், நடந்தது என்ன?...