Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காஷ்மீர் தாக்குதல்.. அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர்.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!

Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து, சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

காஷ்மீர் தாக்குதல்.. அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர்.. டெல்லியில் முக்கிய மீட்டிங்!
பிரதமர் மோடிImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Apr 2025 13:16 PM

காஷ்மீர், ஏப்ரல் 23: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத (Pahalgam Terror Attack) தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, சவுதியில் இருக்கும் பிரதமர் மோடி (PM Modi), அவசர அவசரமாக டெல்லி திரும்பினார். 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று டெல்லி வந்தடைந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாள் அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி 2025 ஏப்ரல் 22ஆம் தேதி சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஷ்மீர் பகல்காம் தாக்குதல்

இந்த சூழலில் தான், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், சவுதி அரேபியா பயணத்தை 2025 ஏப்ரல் 24ஆம் தேதி முடித்து கொண்டு திரும்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அவசரமாக பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.

அரசு வட்டாரங்களின்படி, பிரதமர் ஜெட்டாவிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, 2025 ஏப்ரல் 23ஆம் தேதி காலை டெல்லி திரும்பியதாக தெரிகிறது. இதனை அடுத்து, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, மத்திய நிதி அமைச்சரும் தனது அமெரிக்கா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார். ஐந்து நாள் பயணமாக 2025 ஏப்ரல் 20ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட நிர்மலா சீதாராமன், பாதிலேயே முடித்துக் கொண்டு 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று டெல்லி திரும்புகிறார்.

அவசரமாக இந்தியா திரும்பும் பிரதமர்


ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 24ஆம் தேதி மோசமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பகல்காம் பகுதியில் ராணுவ சீருடை அணிந்து வந்து பயங்கரவாதிகள்  அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாத ஹபீ சயீத்தின் லஷ்கர் இ தொய்பா துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடனேயே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். இதன் பிறகு அவர் உடனடியாக ஸ்ரீநகருக்குப் புறப்பட்டார். பயங்கரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து, ஜம்மு காஷ்மீர், டெல்லியில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

+2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மார்க் ஷீட்... விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
+2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மார்க் ஷீட்... விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு!...
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!...
சினிமாவில் நிராகரிப்புகளை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று...
சினிமாவில் நிராகரிப்புகளை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று......
7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. எல்லையில் பரபரப்பு!
7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. எல்லையில் பரபரப்பு!...
இந்தியா - பாகிஸ்தான் பதட்டம்... ஐபிஎல் ஒத்திவைப்பு என தகவல்
இந்தியா - பாகிஸ்தான் பதட்டம்... ஐபிஎல் ஒத்திவைப்பு என தகவல்...
பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா - பாகிஸ்தான் மோதல்!...
காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. மீட்க நடவடிக்கை
காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. மீட்க நடவடிக்கை...
அசோக் செல்வனுக்கு சிம்பு சொல்லிகொடுத்த பாடம் இதுதான்
அசோக் செல்வனுக்கு சிம்பு சொல்லிகொடுத்த பாடம் இதுதான்...
ஈரோடு அருகே சோகம்.. காதல் தம்பதியினர் கிணற்றில் குதித்து தற்கொலை
ஈரோடு அருகே சோகம்.. காதல் தம்பதியினர் கிணற்றில் குதித்து தற்கொலை...
தள்ளாடும் பொருளாதாரம்.. உலக நாடுகளை உதவிக்கு கோரிய பாகிஸ்தான்!
தள்ளாடும் பொருளாதாரம்.. உலக நாடுகளை உதவிக்கு கோரிய பாகிஸ்தான்!...
ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!...