”மனித வெடிகுண்டாக மாற ரெடி” அமைச்சர் சொன்ன பகீர் தகவல்.. கலங்கிய பாகிஸ்தான்!
Karnataka minister zameer ahmed khan : இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான மோதல் குறித்து கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் பகீர் கருத்தை கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மனிதவெடி குண்டாக மாற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

கர்நாடக, மே 10 : பாகிஸ்தானுக்கு எதிராக மனித வெடிகுண்டாக மாற தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் பகீர் தகவலை கூறியிருக்கிறார். இதற்கு அனுமதி அளித்தால், மனித வெடிகுண்டாக மாற தயாராக இருப்பதாக கூறியுள்ளார். முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஜமீக கான் உள்ளார். இவர் இந்திய பாகிஸ்தான் குறித்து அவ்வப்போது பகீர் தகவலை பேசிவருகிறார். இந்த நிலையில், தற்போது ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜமீர் அகமது கான், ” நாட்டிற்காக நான் என்னை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.
”மனித வெடிகுண்டாக மாற ரெடி”
மத்திய அரசும் பிரதமரும் அனுமதித்தால் நான் மனித வெடிகுண்டாக மாற தயாராக இருப்பதாக தயாராகி இருக்கிறேன். பாஜக தொடர்ந்து முஸ்லிம்களை குறிவைக்கிறது. அவர்கள் வேறு என்ன செய்கிறார்கள்? இந்திய முஸ்லிம்களாகிய நாம் இன்னும் எவ்வளவு நம்மை நிரூபிக்க வேண்டும்? அவர்கள் தொடர்ந்து எங்களை பாகிஸ்தானியர்களாகவே பார்க்கிறார்கள்.
எங்களுக்கு (இந்திய முஸ்லிம்களுக்கு) பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை, உண்மையில், நாங்கள் அவர்களை வெறுக்கிறோம்” என்று கூறியுள்ளார். முன்னதாக, பேசிய அவர், “போர் என்றால், நான் தயாராக இருக்கிறேன். ஒரு அமைச்சராக நான் பாகிஸ்தானுக்குச் சென்று போரிடத் தயாராக இருக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
இந்தியாவுக்கான போரில் பங்கேற்க நானே அங்கு செல்வேன்” என்று கூறினார்.அமைச்சர் கானின் கருத்துக்கு பதில் அளித்த பாஜக எம்.பி ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பினால், அவர் அவ்வாறு செய்து அவர்களின் தலைமையை எதிர்கொள்ள வேண்டும் . ஜமீர் விரும்பினால் பாகிஸ்தானுக்குச் செல்ல முன்வரட்டும்” என்று கூறினார்.
பகீர் கிளப்பும் கர்நாடக அமைச்சர்
#WATCH | Bengaluru | Karnataka Minister BZ Zameer Ahmed Khan says, “I am ready to sacrifice myself for the country. If the central government and the Prime Minister permit, I will go to Pakistan as a suicide bomber… We (Indian muslims) have nothing to do with Pakistan, we hate… pic.twitter.com/Q8hnbfn66z
— ANI (@ANI) May 9, 2025
58 வயதான ஜமீர் அகமது கான், தற்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சராக உள்ளார். அவர் தனது அரசியல் வாழ்க்கையை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தொடங்கினார். மத்திய அமைச்சரும் அப்போதைய காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டதை அடுத்து, 2005ல் சாம்ராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்.
தொடர்ந்து 8 முறை இவர் எம்எல்ஏவாக இருந்துள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு ஜமீர் குமாரசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டார். அப்போது அவர் ஆறு எம்எல்ஏக்களுடன் அவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜமீர் சித்தராமையாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டார். 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.