பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு!

Pakistan Attack : பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், 2025 மே 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்.. முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு!

உமர் அப்துல்லா

Updated On: 

11 May 2025 11:17 AM

ஜம்மு காஷ்மீர், மே 11 : பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, “எந்தவொரு இழப்பீடும் பாகிஸ்தான் தாக்குதலில் அன்புரிக்குரியவர்களை மீட்க முடியாது. குடும்பத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சியை குணப்படுத்தவோ முடியாது. எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதராவாக நிதியுதவியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்” என்றார். 2025 ஏப்ரல் 22ஆம் தேதி  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தாக்குதல்

இந்த தாக்குதலை அடுத்து,  இந்தியா பாகிஸ்தானுக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவி வந்தது.  அதாவது,  கடந்த மூன்று நாட்களாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக ஆபரேஷன் சிந்தூர் என்ற  பெயரில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.

பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் தாக்குதலை நடத்தியது. ஆனால்,  அனைத்து ட்ரோன்களை முறியடித்தது.  மேலும், பாகிஸ்தான் தாக்குதலில் அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்.

இப்படி மூன்று நாட்களுக்கு இருநாடுகளின் பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தன. குறிப்பாக, அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையீட்டது. அதன்படி, அமெரிக்கா தலையீட்டால் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, மோதலை முடிவு கொண்டு வந்தது.

உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி


2025 மே 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் மோதல் முடிவுக்கு வந்ததாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையில்,  பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாகிஸ்தானின் தாக்குதலால் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நமது மக்களின் கஷ்டங்களைக் குறைக்க எனது அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எந்தவொரு இழப்பீடும் ஒரு அன்புக்குரியவரை மாற்றவோ அல்லது குடும்பத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சியை குணப்படுத்தவோ முடியாது. இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். மேலும், இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். இந்த துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் நாங்கள் துணை நிற்கிறோம்”