’யாரு வந்தாலும் நாங்க தான் ஜெயிப்போம்’ – வெளியானது விஜய் சேதுபதியின் ஏஸ் பட ட்ரெய்லர்

Vijay Sethupathys Ace Movie Trailer: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஏஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஆறுமுககுமார் தயாரித்து இயக்கியுள்ளார். மலேசியாவை சுற்றி நடக்கும் கதையாக இந்தப் படம் அமைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

’யாரு வந்தாலும் நாங்க தான் ஜெயிப்போம்’ - வெளியானது விஜய் சேதுபதியின் ஏஸ் பட ட்ரெய்லர்

ஏஸ் பட ட்ரெய்லர்

Published: 

11 May 2025 12:50 PM

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஏஸ் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்விராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், டெனெஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன், ஜஹ்ரினாரிஸ் என பலர் நடித்துள்ளனர். ட்ரெய்லரின் தொடக்கத்தில் எல்லாத்தையும் மறந்துட்டு சாதாரண மனிதர்கள் போல வாழ ஆசையா இருக்கு என்று நடிகர் விஜய் சேதுபதி கூறிகிறார். மலேசியாவில் உள்ள முருகர் கோவிலை காட்டி படம் மலேசியாவை சுற்றி நடக்கிறது என்பதை தெளிவுப்படுத்தி உள்ளனர்.

போல்ட் கண்ணன் என்ற பெயரில் பார்க்கும் ஒவ்வொருத்தர்கிட்டையும் ஒவ்வொரு கதையை கூறுகிறார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் ட்ரெய்லரில் கேசினோ மாதிரி உள்ள இடங்களில் சூது விளையாடி பணத்தை மொத்தமாக ஜெயிப்பது போல காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்தப் படத்தில் பப்லூ பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றன. தற்போது தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் வளர்ச்சியை சாதாரண மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் மேரி கிருஸ்துமஸ், மகாராஜா, விடுதலை பாகம் 2 என மூன்று படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.