Kollywood Stars: தமிழக தேர்தல்.. ஜன நாயகக் கடமையாக ஆற்றிய தமிழ் பிரபலன்கள்.. யார் யாருனு பாருங்க! | TV9 Tamil News

Kollywood Stars: தமிழக தேர்தல்.. ஜன நாயகக் கடமையாக ஆற்றிய தமிழ் பிரபலன்கள்.. யார் யாருனு பாருங்க!

Updated On: 

23 Apr 2026 14:57 PM

 IST

2026 Assembly Elections Kollywood Stars Vote: தமிழகத்தில் இன்று 2026ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் சட்டமன்ற தேர்தல் நடந்துவருகிறது. தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்குகளை செலுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழ் பிரபலங்கள் யார் யார் வாக்களித்துள்ளனர் என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 6தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் இன்று (23/04/2026) தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை செய்துத்தியிருந்தார். வாக்கு செலுத்திய ரஜினிகாந்த், தனது ஆள்காட்டி விரலை காண்பித்து ஓட்டுபோட்டதாக தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் இன்று (23/04/2026) தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கை செய்துத்தியிருந்தார். வாக்கு செலுத்திய ரஜினிகாந்த், தனது ஆள்காட்டி விரலை காண்பித்து ஓட்டுபோட்டதாக தெரிவித்திருந்தார்.

2 / 6

நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய், தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில், சென்னை நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது கடமையை நிறைவேற்றியிருந்தார். அதுபோலவே நடிகர் அஜித் குமாரும் தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில், காலையில் முதல் ஆளாக வாக்கு செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 / 6

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தனது வாக்கு செலுத்தும் கடமையை நிறைவேற்றும் விதத்தில், நடிகர் கமல் ஹாசன் மற்றும் அவரின் மக்கள் நடிகை ஸ்ருதிஹாசன் இருவருமே வந்து வாக்கு செலுத்தியிருந்தனர். மேலும் தனது ஜன நாயகக் கடமையை நிறைவேற்றியது குறித்து ஆள்காட்டி விரலையும் காண்பித்திருந்தனர்.

4 / 6

மேலும் நடிகர் சியான் விக்ரமும் தனது ஜன நாயகக் கடமையை செய்யும் விதத்தில், சட்டமன்ற தேர்தலுக்காக தனது ஓட்டை செலுத்தியிருந்தார். சோலோவாக வந்து தனது வாக்கை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்கு செலுத்திய அவர் தனது ஆள்காட்டி விரலை காண்பித்திருந்தார்.

5 / 6

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவருமே ஒன்றாக வந்து தனது வாக்குகளை செலுத்தியிருந்தனர். மேலும் பேசிய சூர்யா தீவிர ஆராய்ந்து, யோசித்து வாக்குகளை செலுத்துமாறு தெரிவித்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனுடன் ஒன்றாக வந்து தனது வாக்கை செலுத்தியிருந்தார். மேலும் அவர் அனைத்து இளைஞர்களுக்கும் இது கட்டாயமான வேலை, அனைவரும் வந்து வாக்கு செலுத்துமாறு சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

6 / 6

மேலும் தமிழ் நடிகர்கள் கவின், சூரி, பரத், இயக்குநர் அட்லீ, இசையமைப்பாளர் அனிருத், நடிகை திரிஷா கிருஷ்ணன், தனுஷ் என பல்வேறு தமிழ் பிரபலங்கள் தங்களின் ஜன நாயகக் கடமையை நிறைவேற்றும் விதத்தில், அவர் அவர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தனது வாக்குகளை செலுத்தியிருந்தனர். மேலும் அனைவரும் கட்டாயம் வாக்குகளை செலுத்தவேண்டும் என பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us