Good Bad Ugly: குட் பேட் அக்லி ஹிட்டானால் 10 பவுன் செயின் பரிசு.. ரசிகர் அறிவிப்பு!
Madurai Ajith Kumar Fans : கோலிவுட் பேமஸ் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரின் முன்னணி இயக்கத்திலும், அஜித்தின் நடிப்பிலும் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படமானது இன்று 2025, ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகியுள்ள நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் 10 பவுன் தங்கச் சங்கிலியை இயக்குநருக்குப் பரிசாக வைத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் அஜித் குமார் (Ajith Kumar) . இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி (Vidaamuyarchi) திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தை அடுத்தாக தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) முன்னணி இயக்கத்தில், அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படமானது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, அஜித்தின் ஹிட் படங்களின் வசனங்களை மற்றும் காட்சிகள் ஒன்றாக இணைத்து இப்படமானது உருவாகியுள்ளது. அஜித் குமார் 63வது திரைப்படமான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். விடாமுயற்சியைத் தொடர்ந்து அதீத எதிர்பார்ப்புடன் ரிலீசிற்கு காத்திருக்கும் இப்படத்தின் இயக்குநருக்கு, மதுரை அஜித் குமார் ரசிகர்கள் (Madurai Ajith fans) சுமார் 10 பவுன் தங்கத்தைப் பரிசாக வைத்திருக்கின்றனர்.
தங்கம் விற்கும் விலைக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, மதுரை அஜித்தின் ரசிகர்கள் சுமார் 80 கிராம் தங்கச் சங்கிலியைப் பரிசாக வைத்துள்ளனர். இந்த பரிசை குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி, பான் இந்தியா அளவிற்கு வெற்றி பெற்று பின் படத்தின் வெற்றிவிழாவின் போது, இயக்குநருக்கு அணிவிக்க உள்ளதாக ரசிகர் ஒருவர் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவலின் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
குட் பேட் அக்லி ரிலீஸ் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் :
Maamey! MASSSSS 💥💥
The celebrations have begun.
Just a few more hours to go ❤️🔥#GoodBadUgly Grand release worldwide tomorrow.Book your tickets now!
🎟️ https://t.co/jRftZ6uRU5 https://t.co/YSGm52VFQf— Mythri Movie Makers (@MythriOfficial) April 9, 2025
நடிகர் அஜித் குமாரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை, அவருக்கு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் உள்ளனர்.மேலும் நடிகர் அஜித் குமாரும் திரைப்படங்களில் நடிப்பதையும் கடந்து, இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியுடன் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த இரு கார் ரேஸிலும் இந்தியாவிற்காக 3 வது இடத்தை இரு முறை வென்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து அவரின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படமானது பிரம்மாண்ட எதிர்பார்ப்புடனும் , மிகப் பெரிய பட்ஜெட்டிலும் ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இந்த படமானது இன்று (2025, ஏப்ரல் 10) உலகமெங்கும் ரிலீசாகியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் காலை 9 மணி காட்சிகளுடன் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
இதற்காகப் பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் அஜித்தின் ரசிகர்கள் இணைந்து மேளதாள வாத்தியத்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அஜித்தின் விஸ்வரூப நடிப்பைப் பார்ப்பதற்கு இன்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் காத்திருக்கின்றனர். இன்று காலை 9 மணி காட்சிகளுக்காக, ரசிகர்கள் இன்று இரவிலிருந்தே திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.