Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மே 16-ல் திரையரங்குகளில் போட்டிப்போடும் காமெடி நடிகர்களின் படங்கள்

Theatre Release Movies: கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ மற்றும் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருந்த ரெட்ரோ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் வரும் 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்,

மே 16-ல் திரையரங்குகளில் போட்டிப்போடும் காமெடி நடிகர்களின் படங்கள்
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 May 2025 13:27 PM

மாமன்: நடிகர் சூரி (Actor Soori) தற்போது காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து முழு நேரமும் நாயகனாக நடித்து வருகிறார். இறுதியாக இவர் நாயகனாக நடித்து வெளியான படம் விடுதலை பாகம் 2. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தில் தான் நடிகர் சூரி நாயகனாக கோலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன். இந்தப் படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் சூரி உடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சுவாசிகா, பாபா பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தாய் மாமன் மற்றும் மருமகன் பாசத்தை மையமாக வைத்து வெளியாகவுள்ள இந்தப் படம் வருகின்ற 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டிடி நெக்ஸ்ட் லெவல்: நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான இங்கு நான் தான் கிங்கு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கமிட்டானார் நடிகர் சந்தானம்.

இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாசிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஜோரா கைய தட்டுங்க: நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனவர் தற்போது படத்தின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து நடிகர்கள் ஹரிஸ் பேரடி, மணிமாறன், வாசந்தி, ஜாஹிர் அலி, சாந்தி தேவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் தற்போது முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் - பட்டியல் இதோ!
FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் - பட்டியல் இதோ!...
ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இதோ
ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இதோ...
Pay Slip இல்லாமல் கிரெடிட் கார்டு வாங்க வேண்டுமா? - டிப்ஸ் இதோ!
Pay Slip இல்லாமல் கிரெடிட் கார்டு வாங்க வேண்டுமா? - டிப்ஸ் இதோ!...
சிக்கன் பிரியாணி செய்தால் சொதப்பலா? இந்த 5 தவறுகளை தவிருங்கள்!
சிக்கன் பிரியாணி செய்தால் சொதப்பலா? இந்த 5 தவறுகளை தவிருங்கள்!...
த்ரிஷாவின் பிறந்த நாளிற்கு வாழ்த்து சொன்ன தக் லைஃப் படக்குழு
த்ரிஷாவின் பிறந்த நாளிற்கு வாழ்த்து சொன்ன தக் லைஃப் படக்குழு...
வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?.. ரசிகர்கள் உற்சாகம்!
வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?.. ரசிகர்கள் உற்சாகம்!...
அதிமுக - பாஜக கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி.. தமிழிசை பெருமிதம்!
அதிமுக - பாஜக கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி.. தமிழிசை பெருமிதம்!...
ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம் - அசத்தல் திட்டம்!
ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம் - அசத்தல் திட்டம்!...
திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்..!
திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்..!...
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இருக்கவே இருக்கு கவா கவா மூலிகை...
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இருக்கவே இருக்கு கவா கவா மூலிகை......
ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஓடிடியில் நல்ல விலை போன சூர்யா படம்
ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஓடிடியில் நல்ல விலை போன சூர்யா படம்...