Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush : தனுஷின் “D55” படத்தின் ஷூட்டிங் எப்போது..? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்த அப்டேட்!

Dhanushs D55 Movie Update : நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் தமிழில் அடுத்தாக உருவாகவுள்ள திரைப்படம் டி55. இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இப்படமானது எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அப்டேட் கொடுத்துள்ளார்.

Dhanush : தனுஷின் “D55” படத்தின் ஷூட்டிங் எப்போது..? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்த அப்டேட்!
தனுஷின் D55 திரைப்படம் Image Source: IMDb
Barath Murugan
Barath Murugan | Published: 07 Apr 2025 21:49 PM

அமரன் (Amaran) படத்தின் மூலம் பான் இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமானவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy). சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்த இப்படமானது சுமார் ரூ. 350 கோடிகளைக் கடந்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் (Dhanush)  புதிய படத்தில் இணைந்தார். இந்த படமானது தற்காலிகமாக “டி55” (D55) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜைகள் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திலே சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் பூஜைகளைத் தொடர்ந்து தனுஷ், அடுத்தடுத்த படங்களில் பிஸியானார். இவர் தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை (Idly Kadai)  படங்களை இயக்குவதில் பிசியாக இருந்தார். மேலும் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் (Kuberaa, Tere Ishq Mein)  மற்றும் இட்லி கடை படங்களில் நடித்தும் வந்தார்.

மேலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகவுள்ள, இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேட்டுவந்தனர். தற்போது இப்படத்தைப் பற்றிய புதிய அப்டேட்டை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கொடுத்துள்ளார். அவர் டி55 படத்தின்ஷூட்டிங் விரைவில் தொடங்க விருப்பதாகவும், மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது இது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

தனுஷின் டி55 படத்தின் நியூ அப்டேட் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி டி55 படத்தைப் பற்றி கூறியுள்ளார். அவர் அதில் ” நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள டி55 திரைப்படம், தற்போது ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகளில் இருந்து வருகிறது. மேலும் விரைவில் ஒரு நான்கு அல்லது ஐந்து மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இப்படத்தின் கதைக்களத்தைப் பற்றியும் பேசியுள்ளார்.

அவர் ” டி 55 படத்தின் கதைக்களமானது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தின் மெய்யின் கரு என்னவென்றால் ஒரு சூழ்ச்சிகள் நிறைந்த மனிதர்களைச் சுற்றி, அதைப் பற்றி துளியும் தெரியாமல் வாழும் ஒரு நாயகனின் கதையாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு கதைக்களத்தை வைத்து இந்த படத்தை உருவாக்கவிருக்கிறேன்” என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

டி 55 திரைப்படம் :

தனுஷின் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் ஜோடி உண்மையானால் சுமார் 13 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜோடியாக நடிப்பார்கள். மேலும் இப்படத்தில் நடிகை நித்யா மேனனும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.