Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவருடனா? கதையைக் கூறிய அந்த இயக்குநர் யார் தெரியுமா?

Sivakarthikeyan's Next : சிவகார்த்திகேயன், தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையானால், ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவருடனா? கதையைக் கூறிய அந்த இயக்குநர் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 23 Apr 2025 18:26 PM

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் டாக்டர், டான் (Don)  என இவருக்கு அடுத்தடுத்த ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் கடைசியாக அமரன் (Amaran) படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு எவ்வாறு ரசிக்கப்பட்டதோ, அதற்கு ஒரு படி மேலாக நடிகை சாய் பல்லவியின் நடிப்பும் இருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்துதான் இவர்  இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

இந்த படத்தில் இவரின் கதாபாத்திரமானது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூறியிருந்தார். இந்த படமானது இறுதிக்கட்ட பணியில் இருந்து வரும் நிலையில், வரும் 2025 செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ரெட்ரோ பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இதுதொடர்பாக தினத்தந்தி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் கூட்டணி ?

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையைக் கூறியுள்ளாராம். அந்த கதையைக் கேட்டுவிட்டு சிவகார்த்திகேயன் ஓகே என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த கூட்டணி உண்மையானால் ரெட்ரோ திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து  அந்தப் படம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கார்த்தி சுப்பராஜின் ரெட்ரோ திரைப்படம் :

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வந்த படம் ரெட்ரோ. இந்த படத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல் ஆக்ஷ்ன் மற்றும் காமெடி போன்ற கதைக்களத்துடன் இந்த படமானது முழுமையாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது கங்குவா தோல்விக்குப் பின் சூர்யாவின் கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும், பல்வேறு மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம் - நடிகை சாந்தினி!
திருவண்ணாமலை கிரிவலத்தில் நடந்த ஆச்சரியம் - நடிகை சாந்தினி!...
ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!
ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!...
தமிழகத்தில் எந்த எந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை?
தமிழகத்தில் எந்த எந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை?...
தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைத்த கமல் ஹாசன்!
தக் லைஃப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஒத்திவைத்த கமல் ஹாசன்!...
+2 பொதுத்தேர்வு மறுகூட்டல்... விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்
+2 பொதுத்தேர்வு மறுகூட்டல்... விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்...
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!...
சினிமாவில் நிராகரிப்புகளை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று...
சினிமாவில் நிராகரிப்புகளை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று......
7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. எல்லையில் பரபரப்பு!
7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. எல்லையில் பரபரப்பு!...
இந்தியா - பாகிஸ்தான் பதட்டம்... ஐபிஎல் ஒத்திவைப்பு என தகவல்
இந்தியா - பாகிஸ்தான் பதட்டம்... ஐபிஎல் ஒத்திவைப்பு என தகவல்...
பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா - பாகிஸ்தான் மோதல்!...
காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. மீட்க நடவடிக்கை
காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. மீட்க நடவடிக்கை...