Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் உற்சாகம்!

Jailar 2 Movie Updates: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வேட்டையன் படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் கூலி மற்றும் ஜெயிலர் 2 என இரு பிரம்மாண்ட படங்கள் வர உள்ளது. இதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நடிகர் கேமியோ தோற்றத்தில் நடிப்பதாக இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது.

Jailer 2:  ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் உற்சாகம்!

ஜெயிலர் 2

Published: 

17 Jun 2025 18:38 PM

தென்னிந்திய சினிமாவில் பிரபலமிக்க நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)  இயக்கத்தில் கூலி (Coolie)  படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின்  (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailar 2)  படத்தில் இணைந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2025, மார்ச் மாதத்தில் தொடக்கத்தில் சிறப்பாக ஆரம்பமானது. இந்த படத்தில் ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் இந்தி திரைப்பட நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த நடிகர் வேறு யாருமில்லை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்தான் (Shahrukh Khan). இவர்தான் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலால் குறித்து ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தைகளை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஷாருக்கானின் இன்ஸ்டாகிராம் பதிவு

 

ஜெயிலர் 2 ஷூட்டிங் :

நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் இந்த ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் சமீப காலமாகக் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஹூட்டிங்கில் நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் என பலரும் இணைந்து நடித்து வந்தனர். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் அப்பகுதியில் நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காகப் படக்குழு விரைவில் மைசூர் செலவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறாரா என்பதைப் பற்றிய தகவல்கள் இன்னம் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தில் தெலுங்கு பிரபல நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சுமார் 22 நாள் ஷூட்டிங்கிற்கு அவர் சுமார் ரூ 20 கோடிகளுக்கு மேல் சம்பளம் கேட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது.

ஜெயிலர் 2 ரிலீஸ் :

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார். பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் இந்த ஜெயிலர் 2 படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.