ஆர்த்தி ரவியின் சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு பிறகும் ஜோடியாக வந்த ரவி மோகன் மற்றும் கெனிஷா – வைரலாகும் வீடியோ
Actor Ravi Mohan singer Kenishaa Francis : நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்த செய்தி சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ரவி மோகனை பாடகி கெனிஷா உடன் சேர்த்து பல வதந்திகள் பரவிய போது நடிகர் ரவி மோகன் அதனை மறுத்தார்.

தமிழ் சினிமாவில் தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் ரவி மோகன் (Ravi Mohan). இந்தப் படத்தில் நாயகியாக நடிகை சதா நடித்திருந்தார். தெலுங்கு திரையுலக நடிகர் கோபிசந்த் இந்தப் படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார். படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ரவியை ரசிகர்கள் அன்புடன் ஜெயம் ரவி என்று அழைக்கத் தொடங்கினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது பெயரை ஜெயம் ரவி என்று வைத்திருந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெயரை ரவி மோகன் என்று இனி அனைவரும் அழைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். அதிகாரப்பூர்வ பக்கங்களிலும் செய்திகளிலும் ரவி மோகன் என்று அழைக்கப்பட்டாலும் ரசிகர்கள் தற்போது இவரை ஜெயம் ரவி என்றே அடையாளப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன், மிருதன், கோமாளி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் ரவி மோகன்.
இறுதியாக இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில்வ் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்தார். இதில் நாயகியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி மற்றும் ஜீனி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றது. இதில் கராத்தே பாபு மற்றும் ஜீனி படங்களில் நாயகனாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார் ரவி மோகன். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் ரவி மோகன் கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடைப்பெற்று வருகின்றது. இவர்களின் பிரிவை அறிவித்த போதே நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் குறித்து பல கிசுகிசுக்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது. இதனை இருவருமே மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் ஜோடியாக வந்தது மீண்டு பரபரப்பை கிளப்பியது. அதனை தொடர்ந்து அன்று மாலை ரவி மோகனின் மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையும் சர்ச்சையை கிளப்பியது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ:
#RaviMohan & #Keneeshaa spotted again together in today’s event !!
He doesn’t care about any of the Trolls. He just came out of the Toxic life & now enjoying in his own way♥️ pic.twitter.com/FVQrO1JUJ6
— AmuthaBharathi (@CinemaWithAB) May 10, 2025
தொடர்ந்து செய்திகளிலும் இணையதளத்திலும் இது குறித்த பேச்சு வைரலாகி வந்த நிலையில் நேற்று 10-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு ஐசரி கணேஷ் வீட்டு திருமண வரவேற்பிற்கு நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் மீண்டும் ஜோடியாக வருகை தந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.