Cinema Rewind : நான் நடித்ததில் எனக்கு அதிக கமெண்ட் வந்த படம் அதுதான்.. நடிகை நயன்தாரா சொன்ன விஷயம்!
Actress Nayanthara : கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் அஜித்துடன் அடித்த அந்த படத்திற்கு அதிகம் மக்கள் கருத்தைக் கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார். அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் ஒரு படத்திற்கு குறைந்த பட்சம் ரூ. 10 கோடிகள் வாங்குவதாகக் கூறப்படுகிறது. இவரின் நடிப்பில் தமிழில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிக் கிட்டத்தட்ட 1 வருடங்களுக்கும் மேலாகிறது. இவரின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் டெஸ்ட் (Test). இந்த படத்தைத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சசிகாந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா, நடிகர் ஆர். மாதவனுக்கு (R. Madavan)ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இதுவரை நடித்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட தன் கைவசத்தில் 6 படங்கள் வீதம் வைத்துள்ளார். இந்த படங்கள் இந்த 2025ம் ஆண்டு முதல், 2026ம் ஆண்டுவரை வெளியீட்டிற்கு வரிசை கட்டி நிற்கின்றன. மேலும் நடிகை நயன்தாரா தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்கு ரூ. 14 கோடிகளைச் சம்பளமாகக் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போதுவரை முன்னணி கதாநாயகியாகப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக அஜித்துடன் (Ajith) பில்லா (Billa) படத்தில் நடித்ததற்காக மக்கள் கொடுத்த கருத்துக்களைப் பற்றிப் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் நடிகை நயன்தாரா பேசியது குறித்துப் பார்க்கலாம்.
நயன்தாரா அஜித்துடன் பில்லா படத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் கூறியதை பற்றி பேசியது
முன்னதாக பேசிய நேர்காணலில் பேசிய நயன்தாரா, “ஆரம்பத்தில் நான் நடித்த படங்களிலே மக்கள் மத்தியில் இருந்து அதிக கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் வந்த படம் என்றால் பில்லாதான். ஆனால் நான் பில்லா படத்தில் சாதாரணமாகப் படங்களில் நடிப்பதுபோல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. அந்த படத்தில் எனது கதாபாத்திரம் திமிராக இருக்கும் பெண் போல இருப்பதுதான்.பெரியதாக இந்தக் கதாபாத்திரத்தில் பில்லாவில் நடிக்காவிட்டாலும், அந்த திமிரான ரோலில் நடிப்பதற்கு நான் கொஞ்சம் அதிகமாக கஷ்டபட்டேன்தான். அந்த ஒட்டுமொத்த படம் முழுவதுமே நான் டெரராக இருப்பது போலத்தான் இருக்கும் என்று நடிகை நயன்தாரா பேசியிருந்தார்.
நடிகை நயன்தாராவின் புதிய படங்கள் :
நடிகை நயன்தாரா தமிழில் மட்டும் மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2 மற்றும் ராக்காயி உள்ளிட்ட படங்களை தன கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் டியர் ஸ்டூடெண்ட் போன்ற படங்களையும், கன்னடத்தில் டாக்சிக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்டக் கணக்குப் போட்டால் சுமார் 7 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.