வீக்லி ஸ்டார் என்று பிரபல நடிகரை கிண்டலடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்
Actress Keerthy suresh: தமிழில் முன்னணி நடிகர்களான நடிகர்கள் விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், விஜய், ரஜினிகாந்த் என பலருடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களது கூட்டணியில் உருவான படம் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் 2015-ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெங்குயின், அண்ணாத்தே, சாணி காயிதம், மாமன்னன், ரகு தாத்தா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ரகு தாத்தா. இந்தப் படத்தை இயக்குநர் சுமன் குமார் எழுதி இயக்கியிருந்தார். அரசியல் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ஆனந்த்சாமி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, ஜானகி மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் டிசம்பர் மாதம் 12-ம் தேதி 2024-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துக்கொண்டார். மேலும் இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணிவெடி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படம் குறித்து அவ்வப்போது படக்குழுவினர் அப்டேட்டை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பேசில் ஜோசஃப்பிற்கு ‘மேன் ஆப் தி இயர்’ என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது, நடிகர் பேசில் ஜோசஃப் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது, பேசில் ஜோசஃப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஒவ்வொரு படமும் வெளியாகும்போதும் பல போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால் பேசிலை வீக்லி ஸ்டார் என்று கூறும் அளவிற்கு அவர் படங்கள் வாரம் வாரம் வெளியாகிறது என்று கிண்டலாக பேசியுள்ளார்.