Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kayadu Lohar : கோலிவுட் கலக்கல் நாயகி கயாடு லோஹர்… அவரின் பெயரின் அர்த்தம் தெரியுமா?

Kayadu Lohar Name Meaning : தமிழ் சினிமாவில் நடித்த முதல் படம் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் கயாடு லோஹர். சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் இவர் பான் இந்தியா அளவிற்குப் பிரபலமானார். மிகவும் வித்தியாசமான பெயரைக் கொண்ட, கயாடு லோஹர் என்ற பெயரின் அர்த்தம் குறித்து அவரே கூறியுள்ளார். அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

Kayadu Lohar : கோலிவுட் கலக்கல் நாயகி கயாடு லோஹர்… அவரின் பெயரின் அர்த்தம் தெரியுமா?
நடிகை கயாடு லோஹர்Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 01 May 2025 16:56 PM

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் (Ashwath Marimuthu)  இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon). இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானது. இந்த படத்தில் இரண்டு நடிகைகள் நடித்திருந்தாலும், மிகவும் பிரபலமானவர் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் நடிகை ஆவார். இவர் ஆரம்பத்தில் விளம்பரங்கள் மற்றும் சிறு சிறு அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வந்துள்ளார். அதை தொடர்ந்து இவரின் சினிமா அறிமுகமாக அமைந்த படம் முகில்பேட்டை. கடந்த 2021ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என  மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவரின் தமிழ் அறிமுகமாக அமைந்த படம் டிராகன். இந்த படத்தின் மூலம் இவருக்கு பான் இந்தியா முழுவதும் பிரபலம் கிடைத்தது என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து தமிழில் மட்டும் 2 படங்களில் கமிட்டாகியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்திருக்கும். நடிகை கயாடு லோஹரின் பெயரின் அர்த்தம் என்னவென்று? கயாடு லோஹர் என்ற பெயரின் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி அவரே கூறியுள்ளார். கயாடு என்ற பெயரானது சமஸ்கிருத மொழி என்று அவர் கூறியுள்ளார், அது குறித்துத் தெளிவாக பார்க்கலாம்.

நடிகை கயாடு லோஹர் பெயரின் அர்த்தம் என்ன ?

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கயாடு லோஹரிடம், தொகுப்பாளர் உங்களின் பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்டிருப்பார். அதற்கு நடிகை கயாடு லோஹர் “நான் வெளிப்படையாகக் கூறுகிறேன் என்னுடைய பெயருக்கு அர்த்தமே கிடையாது. ஆனால் எனது பெயர் சமஸ்கிருத மொழி பெயர். எனது தந்தையின் அம்மாவின் பெயர் கயாடு தாரா. அவரின் நினைவாக எனது தந்தை எனக்கு கயாடு என்ற பெயரை வைத்தார். இந்த பெயர் அர்த்தமே இல்லை என்று நடிகை கயாடு லோஹர் கூறியிருக்கிறார். இதன் மூலமாகப் பல ரசிகர்களின் சந்தேகத்தையும் தீர்த்துள்ளார்.

நடிகை கயாடு லோஹரின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

நடிகை கயாடு லோஹரின் புதிய படங்கள் :

நடிகை கயாடு லோஹர் டிராகன் படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இவர் நடிகர் அதர்வாவின் இதயம் முரளி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகி நடந்து வருகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை கயாடு லோஹர் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக்கவுள்ள STR 49 திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்...
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?...
ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!
ஏப்ரல் 2025ல் அதிகபட்சமாக ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!...
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!...
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி...
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி...