Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சந்தானம் அந்தப் படத்தில் அப்படி பன்னது எனக்கு பிடிக்கல – நடிகை தேவயானி ஓபன் டாக்

Actress Devayani About Santhanam: தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்கள் கமல் ஹாசன், சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், விஜய், அஜித் குமார், விக்ரம் என பல நடிகர்களுக்கு நாயகியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

சந்தானம் அந்தப் படத்தில் அப்படி பன்னது எனக்கு பிடிக்கல – நடிகை தேவயானி ஓபன் டாக்
நடிகை தேவயானிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 May 2025 18:25 PM

கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் வெளியான படம் தொட்டா சிணுங்கி. இந்தப் படத்தின் மூலம் நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். கடந்த 1996-ம் ஆண்டு தொட்டா சிணுங்கி படத்தைத் தொடர்ந்து வெளியான படம் காதல் கோட்டை (Kadhal Kottai). நடிகை தேவயானியை இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நாயகன் அஜித் குமாரும் நாயகியும் தேவயானியும் பார்க்கமலே காதல் செய்வார்கள். அஜித் குமாரும் மற்றும் தேவயானி இருவரும் க்ளைமேக்ஸில் இணையும் காட்சிக்கு திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்தப் படம் 90களில் தூரத்து காதல்கள் அதாவது லாங்க் டிஸ்டன்ஸ் ரிலேஷன்பிப் எப்படி இருக்கும் என்று அற்புதமாக காட்டியிருக்கும். அந்தப் படத்தை தொடர்ந்து 2000 ஆண்டு வரை பெரிய அளவில் பல படங்களில் நடிகை நடித்தாலும் படங்கள் நடிகை தேவயானிக்கு வெற்றியடையவில்லை என்றே கூறலாம்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடிகை தேவயானி நடித்து வந்த நிலையில் 2000-ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மேலும் காதல் கோட்டை, பாரதி, சூர்யவம்சம் ஆகிய படங்களில் நடித்ததற்காக நடிகை தேவயானி சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதை வென்றார்.

இதனை தொடர்ந்து நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த காதலுக்கு நடிகை தேவயானியின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. 1999-ம் ஆண்டு இயக்குநர் ராஜகுமாரன் இயக்கத்தில் நடிகை தேவயானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், சிவராம், திருமதி தமிழ் என தொடர்ந்து ராஜகுமாரன் இயக்கத்தில் நடிகை தேவயானி தொடந்து நடித்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார் நடிகை தேவயானி.

அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளார் நடிகை தேவயானி. அதன்படி தற்போது நிழற்குடை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை தேவயானியை அறிமுகம் செய்த இயக்குநர் அதியனின் உதவி இயக்குநர் சிவா ஆறுமுகம் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது யூடியூப் தளத்திற்கு நடிகை தேவயானி அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அந்தப் பேட்டியில் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தேவயானியின் கணவர் ராஜகுமாரனும் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார்.

அதில் ராஜகுமாரனை நடிகர் சந்தானம் கலாய்த்து தள்ளியிருப்பார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த காட்சி தனக்கு பிடிக்கவில்லை என்றும் அது மன வேதனையை அளித்ததாகவும் நடிகை தேவயாணி பேட்டியளித்துள்ளார். ஏன் எனது கணவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று கூட எனக்கு தெரியவில்லை எனவும் அந்தப் பேட்டியில் நடிகை தேவயானி தெரிவித்தது தற்போது வைரலாகி வருகின்றது.

பிரதமர் மோடி எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பார் - ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பார் - ராஜ்நாத் சிங்...
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்...
சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு - வைரல் வீடியோ!
சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு - வைரல் வீடியோ!...
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்க... ராஷ்மிகா
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்க... ராஷ்மிகா...
பராக்கின் 95 ரன்கள் வீண்.. KKR 1 ரன்னில் த்ரில் வெற்றி..!
பராக்கின் 95 ரன்கள் வீண்.. KKR 1 ரன்னில் த்ரில் வெற்றி..!...
6 பாடங்களிலும் தோல்வி.. கேக் வெட்டி ஊட்டி விட்ட பெற்றோர்கள்..!
6 பாடங்களிலும் தோல்வி.. கேக் வெட்டி ஊட்டி விட்ட பெற்றோர்கள்..!...
ஜன நாயகன் ஷூட்டிங்... ரசிகர்களை பார்க்க ஜீப்பில் வந்த விஜய்...
ஜன நாயகன் ஷூட்டிங்... ரசிகர்களை பார்க்க ஜீப்பில் வந்த விஜய்......
ராயன் படப் பாடலை மேடையில் பாடி அசத்திய தனுஷ் - ஏ.ஆர். ரஹ்மான்!
ராயன் படப் பாடலை மேடையில் பாடி அசத்திய தனுஷ் - ஏ.ஆர். ரஹ்மான்!...
கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!
கிஸ் பட டைட்டில் உரிமை.. கேட்டவுடன் கொடுத்த பிரபல இயக்குநர்!...
ஆக்ரோஷமாகி ஊழியர்களை தாக்கிய ரோபோட் - வைரல் வீடியோ!
ஆக்ரோஷமாகி ஊழியர்களை தாக்கிய ரோபோட் - வைரல் வீடியோ!...
100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி!
100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி!...