சினிமாவில் நிராகரிப்புகளை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்று – விஜய் தேவரகொண்டா
Actor Vijay Deverakonda: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவில் நடிகராக நுழைவது எவ்வளவு கடினமான ஒன்று என்றும் அங்கு எதிர்கொண்ட நிராகரிப்புகள் குறித்தும் வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

விஜய் தேவரகொண்டா
தெலுங்கி சினிமாவில் சென்சேஷ்னல் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda). இவர் தெலுங்கு சினிமாவில் 2011-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான் நுவ்வில என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தில் 6 பேரை இயக்குநர் ரவி பாபு அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் ஒருவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவ்வடே சுப்ரமணியம், துவாரகா ஆகிய படங்களில் நடித்தனர். இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில்வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலம் ஆனார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இந்தப் படத்தை தொடர்ந்து பான் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா. ஆல்ஃபா ஆணாக நடித்து இருந்த போதிலும் இவரை பெண்களுக்குப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இவருக்கு அதிக வரவேற்பை கொடுத்தப் படம் கீதா கோவிந்தம்.
இந்தப் படத்தில் தான் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முதன் முறையாக கூட்டணி அமைத்தனர். 2018-ம் ஆண்டு இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் இவர்களது ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதுவும் தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா, டியர் காம்ரேட், வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர், குஷி, தி ஃபேமிலி ஸ்டார் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இவரது நடிப்பில் வெளியான் ஃபேமிலி ஸ்டார் படம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்தப் படத்தில் மிடில்கிளாஸ் குடும்பத்தில் கூட்டுக் குடும்பத்தில் வாழும் இவர் மிகவும் கஞ்சனாக இருக்கிறார். இந்த நிலையில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டா பதிவு:
தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் கிங்டம். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி எழுதி இயக்கியுள்ளார். இவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படம் வருகின்ற மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா முன்னதாக அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சில தீர்மானமான முடிவுகளுடனே வந்தேன். 25 வயதிற்குள் நடிகராக வேண்டும் இல்லை என்றால் திரைக்கதை ஆசிரியராக வேண்டும் என்று நினைத்துதான் சினிமாவிற்குள் வந்தேன்.
வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காதபோதே பல படங்களை நான் வேண்டாம் என்று முடிவு செய்தேன். அப்போது என்னுடன் இருந்தவர்கள் இப்படி பன்னவேண்டாம் என்றும் கூறினார்கள். ஆனால் நான் என்னுடைய எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்வதற்காக காத்திருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 25-வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு எவடே சுப்ரமணியம் என்ற ஹிட் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.