நானியுடன் இணைந்து மீண்டும் படம் நடிப்பீர்களா? விஜய் தேவரகொண்டா சொன்ன பதில்
Actor Vijay Deverakonda: இயக்குனர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி உள்ள தனது வரவிருக்கும் படமான கிங்டமின் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த நிலையில் நடிகர் நானியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விஜய் தேவரகொண்டா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Deverakonda) தற்போது கிங்டம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கிங்டம். ஸ்பை திரில்லர் படமான இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் சத்யதேவ் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்தப் படம் 30-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது
நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைப்பதாக அறிவித்த படக்குழு படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியையும் அந்த அறிவிப்பிலேயே தெரிவித்திருந்தது. அதன்படி நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கிங்டம் படம் வருகின்ற 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பேட்டி:
நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஃபிலிம்பேர் செய்தியுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது நீங்கள் மீண்டும் நடிகர் நானி உடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, எங்கள் இருவருக்கும் பொருந்தக்கூடிய எந்த ஒரு ஸ்கிரிப்டும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. என்றாவது அப்படி ஒரு கதை வந்தால் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
நானியும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்த எவடே சுப்ரமணியம்:
நடிகர்கள் நானி மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் எவடே சுப்ரமணியம். இந்தப் படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தான் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர்கள் நானி மற்றும் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிகர்கள் மாளவிகா நாயர் மற்றும் ரிது வர்மா ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியானபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சினிமாவில் அறிமுகம் ஆகி சில படங்களே நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தில் முழுவதுமாக இல்லை என்றாலும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.