ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஓடிடியில் நல்ல விலைக்கு விற்கப்பட்ட சூர்யா – வெங்கி அட்லுரி படம்!
Actor Suriya: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் அவர் 45-வது படத்திற்காக நடிகர் ஆ.ஜே.பாலாஜி இயக்கத்திலும் 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் ஓடிடி அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் தற்போது ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்று வருகின்றது. ரெட்ரோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கத்தில் நடிக்க உள்ளது குறித்த அப்டேட் வெளியானது. சூர்யாவின் 45-வது படமான இது அறிவிப்பு வெளியாகி அவ்வப்போது அப்டேட்களும் வெளியானது. இடையில் படத்தின் படப்பிடிப்புகள் நின்றுவிட்டது என்றும் வதந்திகள் பரவியது. ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்தப் படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாக நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் பரவியது. ஆனால் இதுகுறித்து நடிகர் தரப்போ அல்லது இயக்குநர் தரப்போ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ரெட்ரோ படத்தின் புரமோசன் பணிகளின் போது ஹைதாரபாத்தில் நடைப்பெற்ற போது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை நடிகர் சூர்யா தெரிவித்தார். அது என்ன என்றால் இயக்குநர் வெங்கி அட்லூரி உடனான கூட்டணியை உறுதி செய்தது தான். அந்த புரமோஷன் விழாவில் இந்த அப்டேடை தெரிவித்ததும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
அதற்கு காரணம் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியான இறுதிப் படமான லக்கி பாஸ்கர் தான். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து வித்யாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் தெலுங்கு மொழி மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே நேரடியாக தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் வெங்கி அட்லூரி படத்தை இயக்க உள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தப் படத்தில் படப்பிடிப்பு மே மாதத்தின் மத்தியில் தொடங்கும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னறே படம் நல்ல விலைக்கு ஓடிடியில் விற்பனை ஆகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ரூபாய் 85 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.