Shivarajkumar : நான் கமல் சாரின் பெரிய ரசிகன்.. அவரை கட்டிபிடித்துவிட்டு 3 நாள் குளிக்கவில்லை – நடிகர் சிவராஜ் குமார் பேச்சு!
Sivarajkumar praised Kamal Haasan : பிரபல கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் சிவராஜ் குமார். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட இவர் அதில், நான் கமல் சாரின் மிகப் பெரிய ரசிகன் என்று கூறியுள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவராஜ்குமார் மற்றும் கமல்ஹாசன்
கன்னட சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவராஜ் குமார் (Shivarajkuma). இவர் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட, இவர் பல படங்களைத் தயாரித்து ஹிட் கொடுத்திருக்கிறார். கன்னட மொழியில் பிரபலமான இவர், தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் (Jailer) படத்தில் முக்கியமான ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து தனுஷின் (Dhanush) கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவராஜ் குமார் சமீபத்தில் நடைபெற்ற கமல்ஹாசன் (kamal Haasan) மற்றும் சிலம்பரசனின் தக் லைஃப் (Thug Life) பட இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், மேடையில் நடிகர் கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளினார். அதில் அவர் மிக பெரிய கமல்ஹாசனின் ரசிகன் எனவும், அவரின் படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்த்துவிடுவேன் என்றும் பேசியுள்ளார். இந்த விஷயமானது கமல்ஹாசனின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல் பற்றி சிவராஜ் குமார் பேசிய விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவராஜ் குமார், ” நான் மிகப் பெரிய பெரிய கமல் சார் ரசிகன்,அவரின் படங்களை எல்லாம் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். கமல்ஹாசன் சார் என்றால் எனக்கு உயிர், அவரின் படங்கள் பிடிக்கும், அவரின் கண்கள் பிடிக்கும், அவரின் சிரிப்பு எனக்கு பிடிக்கும். எனக்கு அவரிடம் இருந்து எல்லாமே பிடிக்கும். மேலும் இந்த விஷயத்தை நான் பல இடங்களில் கூறியிருக்கிறேன், ஒருமுறை கமல் சார் எங்களின் வீட்டிற்கு வந்தார். அவர் எனது அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார், அப்போது நான் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.
அதன் பிறகு எனது அப்பாவிடம், என்னைப் பார்த்து இவர் யார் என்று கமல் சார் கேட்டார். அதுக்கு அப்பா, எனது மகன் என்று கூறினார். பின் கமல் சார் எனக்கு கை கொடுத்தார். நான் அவரிடம் உங்களை கட்டிப்பிடிக்கலாமா என்று கேட்டேன். பின் அவரை கட்டி பிடித்துவிட்டு நான் 3 நாட்கள் குளிக்கவில்லை, நான் உண்மையாகவே கூறுகிறேன். அவரின் அவரின் வாசம் என்னை விட்டுப் போய்விடக்கூடாது என குளிக்கவில்லை. அந்த அளவிற்கு அவரின் தீவிர ரசிகன் நான்” என்று நடிகர் சிவராஜ் குமார் கூறியிருந்தார்.
நடிகர் சிவராஜ் குமார் பேசிய வீடியோ :
“When I met #KamalHaasan sir at my house with my father, i asked Kamal sir for a hug & i didn’t bath for 3 days, because i want his odour on me🫂. After my cancer surgery, KamalHaasan sir called me, I had tears after his call🥹♥️”
– #Shivarajkumar pic.twitter.com/lmcVqZ17Zc— AmuthaBharathi (@CinemaWithAB) May 25, 2025
நடிகர் சிவராஜ் குமார், தக் லைஃப் பட இசை வெளியிட்டு விழாவின் மேடையில் கலந்துகொண்டு நடிகர் கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளினார். மேலும் பல பிரபலங்கள் இந்த இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டனர். ஆனால் நடிகர் சிவராஜ் குமார் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.