Sivakarthikeyan : ‘ஹோ சோனா’.. நண்பர்களுடன் அஜித்தின் பாடலை பாடி அசத்திய சிவகார்த்திகேயன்!
Actor Sivakarthikeyan Viral Video : அமரன் படத்தைத் தொடர்ந்து சினிமாவில் சிவகார்த்திகேயன் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார். இவரின் நடிப்பில் தற்போது மதராஸி மற்றும் பராசக்தி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. படங்களைத் தொடர்ந்து, நண்பர்களுடனும் தனது நேரத்தை செலவளித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நண்பர்களுடன், நடிகர் அஜித்தின் பழைய பாடலை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார். அதைத் தொடர்ந்து துணை நடிகர், காமெடியன் என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி, தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக அமரன் (Amaran) படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் வெளியான இப்படமானது, எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்தைத் தொடர்ந்தே இவருக்கு பான் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர். மேலும் நடிகர் விஜய்யின் (Vijay) கோட் (GOAT) படத்திலும், கேமியோ ரோலில் நடித்து அசத்தியிருந்தார். அதிலும் நடிகர் விஜய் துப்பாக்கி கொடுக்கும் காட்சியானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
அதை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்களும், இவருக்கு ரசிகர்களானார்கள். மேலும் இவர் தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி என்று படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது நண்பர்களுடன் சிவகார்த்திகேயன், அஜித்தின் திரைப்படப் பாடலை பாடி வைப் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோவானது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ :
View this post on Instagram
இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் தனது நண்பர்களுடன், பாடலை பாடி அசத்தியுள்ளார். அவர் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான “வாலி” படத்தில் உள்ள, “ஹோ சோனா” என்ற பாடலை பாடியுள்ளார். படப்பிடிப்புகளைத் தொடர்ந்து தனது நண்பர்களுடனும் தனது பொன்னான நேரத்தைச் செலவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது இந்த வீடியோவானது, ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. மேலும் பல் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும், பதிவின் கீழ் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்கள் :
சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது பராசக்தி படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் நிலையில், டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஸ்ரீலங்காவில் நடந்து வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மதராஸி படமும் 90 சதவீதம் ஷூட்டிங் நிறைவடைந்தது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில், உருவாகிவரும் இப்படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் கலந்த காதல் கதைக்களத்துடன் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் இந்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது, இந்த தகவல் உறுதியாகத் தெரியவில்லை.