Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan: கேரள முதல்வருடன் சந்திப்பு.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு!

Sivakarthikeyan Meets Kerala Chief Minister Pinarayi Vijayan : நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பான் இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராகி இருந்து வருகிறார். அண்மையில் இவர் கேரளாவில் நிகழ்ச்சி ஊரில் முதல் அமைச்சர் பிரனாயி விஜயனைச் சந்தித்துள்ளார். தற்போது அந்த நெகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sivakarthikeyan:  கேரள முதல்வருடன் சந்திப்பு.. சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு!
சிவகார்த்திகேயன் மற்றும் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 15 Apr 2025 19:29 PM

தமிழ் சினிமாவில் சின்னதிரை தொகுப்பாளராக இருந்து, தற்போது பான் இந்தியா அளவிற்குப் பிரபலமான கதாநாயகனாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் இறுதியாக அமரன் (Amaran) திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்திற்காக இவருக்குப் பல விருதுகளும் வழங்கப்பட்டது. இந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகமாகினர். மேலும் இவர் சமீபத்தில் கேரளாவில் முதல் அமைச்சர் (Chief Minister of Kerala) பினராயி விஜயனை (Pinarayi Vijayan) அவரது வீட்டில் சந்தித்துள்ளார். பின் கேரளா, கண்ணூரில் (Kannur)  நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளா முதல்வருடன் இணைந்து கலந்து கொண்டுள்ளார்.மேலும் இந்த சந்திப்பு ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.

மேலும் கேரள முதல்வரைச் சந்தித்தது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன், நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது கேரள முதல்வர் பிரனாயி விஜயனுடன், சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

கேரளா முதல்வருடன்- நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு :

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பதிவின் கீழ் “கேரளாவில் கண்ணூரில் நடைபெற்ற பினராயிபெருமா காலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் அந்த நிகழ்ச்சியில் கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயனுடனும், சுற்றுலாத்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் மற்றும் அரசியல்வாதிக்குப் பலருடனும் சந்தித்ததில் மிகவும் நெகிழ்ச்சியடைகிறேன். இப்படிப்பட்ட மறக்கமுடியாத நிகழ்விற்கு மிக்க நன்றி” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

பராசக்தி மற்றும் மதராஸி :

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது பராசக்தி திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் இந்த படமானது வின்டேஜ் கதைக்களத்துடன் உருவாகிவருகிறது. இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்று கூறப்படுகிறது.

இப்படத்திற்கு முன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவந்த மதராஸி படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படமானது சிவகார்த்திகேயனின் நடிப்பில் இதுவரை வெளியாகாத, முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகக் கன்னட பிரபல நடிகை ருக்மிணி வசந்த நடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் இந்த படமானது பிரம்மாண்ட வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ஏஸ்' படத்தில் லேடி கெட்டப்பில் யோகிபாபு.. வைரலாகும் போட்டோஸ்!
'ஏஸ்' படத்தில் லேடி கெட்டப்பில் யோகிபாபு.. வைரலாகும் போட்டோஸ்!...
ரெட்ரோ பட லாபத்தின் பங்கை அகரம் பவுண்டேசனுக்கு பகிர்ந்த படக்குழு!
ரெட்ரோ பட லாபத்தின் பங்கை அகரம் பவுண்டேசனுக்கு பகிர்ந்த படக்குழு!...
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 15 பேர் பலி!
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 15 பேர் பலி!...
கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு! அழுத்ததால் ரோஹித் ஓய்வா?
கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு! அழுத்ததால் ரோஹித் ஓய்வா?...
அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!
அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!...
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!...
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு..
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு.....
ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. சினேகா சொன்ன பதில்!
ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. சினேகா சொன்ன பதில்!...
இயக்குநராக இருந்து படத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்?
இயக்குநராக இருந்து படத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்?...
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! எங்கே காண்பது? முழு விவரம்
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! எங்கே காண்பது? முழு விவரம்...
ஜி.வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்!
ஜி.வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்!...