Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : தமிழில் சூப்பர் ஹிட்.. ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் “மாநாடு” திரைப்படம்!

Maanaadu Movie Will Be Released In Japan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தற்போது தக் லைப், STR 49,50 மற்றும் STR 51 போன்ற படங்கள் உருவாகிவருகிறது. இப்படங்களுக்கு முன் இவர் நடித்திருந்த படம் மாநாடு . கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது ஜப்பான் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பார்க்கலாம்.

Silambarasan : தமிழில் சூப்பர் ஹிட்.. ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் “மாநாடு” திரைப்படம்!
மாநாடு திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 08 Apr 2025 22:08 PM

கோலிவுட் திரையுலகில் மிகவும் பாப்புலரான நடிகர்களில் ஒருவர் சிம்பு (Silambarasan). இவரின் நடிப்பில் இதுவரை 45-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனது சிறுவயதில், தனது தந்தை டி.ராஜேந்தரின் (T.Rajendar) படங்களில் நடித்து வந்தார். அப்போதே இவர் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை தன் வசமாக்கினார்.  இதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து, தற்போது மாஸ் கதாநாயகனாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு (Maanaadu). இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu)  இயக்கியிருந்தார். இப்படமானது அறிவியல் புனைகதைகள் சார்ந்த, ஆக்ஷ்ன் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் ஆக்சன் ஹீரோவாக கலக்கியிருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம்தான் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது பல சர்ச்சைக்குப் பின் கடந்த, 2021ம் ஆண்டில் நவம்பர் 25ம் தேதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படமானது ஜப்பானில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை இடத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி (Producer Suresh Kamatchi)  வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட பதிவு :

இந்த பதிவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நல்ல திரைப்படம் ஒரு அழகான பறவை போல என்று கூறியுள்ளார். மேலும் தமிழ் மக்களின் மனதைக் கவர்ந்த இந்த மாநாடு திரைப்படம் வரும் 2025, மே மாதத்தில் ஜப்பானிலும் வெளியாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இப்படம் ஜப்பானியர்களின் மனதிலும் இடம் பிடிக்கும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையில் வெளியான இப்படத்தில், சிலம்பரசனுடன் நடிகர்கள் கல்யாணி பிரியதர்சன், எஸ்.ஜே. சூர்யா. பிரேம்ஜி, சந்திரசேகர், கருணாஸ், மனோஜ் பாரதி ராஜா, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படமானது சுமார் ரூ. 117 கோடிகளை வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படமானது, ஜப்பானிலும் வரும் 2025, மே மாதத்தில் வெளியாகவுள்ளது.

சிம்புவின் புதிய படங்கள் :

நடிகர் சிலம்பரசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது இறுதிக்கட்ட படப்பிடிப்புகளில் இருந்துவரும் நிலையில், இதை தொடர்ந்து STR 49, 50 மற்றும் 51 என மூன்று படங்களைக் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஆண்டுக்கு 2 படங்கள் வீதம், தற்போது அவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.