வெற்றிநடை போடும் டூரிஸ்ட் ஃபேமிலி படம்… அதிகரிக்கும் திரையரங்கு காட்சிகள்
Tourist Family Movie: கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு தமிழில் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. ஒன்று சூர்யாவின் நடிப்பின் உருவான ரெட்ரோ மற்றொன்று சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி. இதில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரன் (Simran) முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. ஆனால் இலங்கையில் இருந்து ஒரு குடும்பம் நாடு கடந்து வருகிறது என்பது மனதை பாதிக்குமோ என்ற எண்ணமும் ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே படம் குறித்து பேசிய இயக்குநர் இது ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இருக்கும் என்றும் ஒரு நல்ல கருத்தை மிகவும் எளிமையாக கூறியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு நல்ல ஃபீல் குட் படத்தை பார்த்த அனுபவும் உள்ளது என்றும் படம் பார்த்தவர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இலங்கையை விட்டு சசிகுமாரின் குடும்பம் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்கிறார்கள். சசிகுமாரின் மனைவியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். இவர்களது இரண்டு மகன்களாக மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் இருவரும் மகன்களாக நடித்திருந்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து சிம்ரனின் அண்ணன் யோகி பாபு சென்னைக்கு அழைத்து செல்ல அங்கு இருந்து தங்களது வாழ்கையை தொடங்க அவர்கள் காத்திருந்தனர். ஆனால் ராமேஸ்வரம் கடல் கறையில் போலீஸ் ரமேஷ் திலக்கிடம் மாட்டுக்கொள்ள அவரிடமும் பேசி அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார்.
சென்னையில் இவர்களுக்கு பாத்த வீட்டின் ஓனர் பக்ஸ் போலீஸாக இருக்கிறார். இது தெரியாமல் அங்கையே வீடு பார்த்து விடுகிறார் யோகி பாபு. இந்த நிலையில் சசிகுமார் பேசும் தமிழைக் கேட்ட பக்ஸ் நீங்க எல்லாம் கேரளாவில் இருந்து தான வந்தீங்க என்று கேட்க அதையே தங்களது அடையாளமாக மாற்றிக்கொண்டனர்.
அதனைதொடர்ந்து யோகி பாபுவும் இவர்கள் கேரளாவில் இருந்து வந்தது போல சில ஆவணங்களையும் தயார் செய்து வாழ்கிறார்கள். அந்த தெருவில் அக்கம் பக்கத்தில் யாரிடமும் பேச வேண்டாம் என்று யோகிபாபு கூறிவிட்டு செல்ல, ஆனால் சசிகுமார் மற்றும் சிம்ரன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அந்த தெருவில் உள்ள அனைவருடனும் சகஜமாக பழகினர்.
ஒரு கட்டத்தில் இவர்களை தெரியாத யாரும் அந்த தெருவில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அங்கு உள்ளவர்களுடன் நெருக்கமாக மாறிவிட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக ராமேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு இவர்கள் காரணமாக இருக்கும் என்று அங்கு இருந்து போலீஸார் தேடி வருகின்றனர்.
அவர்களிடம் சசிகுமாரின் குடும்பத்தினர் சிக்கினார்களா? அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ். படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் படத்தின் காட்சிகளை தற்போது திரையரங்குகளில் அதிகரித்துள்ளனர்.