Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: அஜித்திற்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

Rajinikanth Advised To Ajith : தமிழ் சினிமாவில் உச்ச பிரபலங்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அஜித்திற்கு ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அது என்ன என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

Ajith Kumar: அஜித்திற்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?
அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த்
barath-murugan
Barath Murugan | Updated On: 11 May 2025 12:03 PM

நடிகர் அஜித் குமாரின்  (Ajith Kumar ) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த படமானது வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த குட் பேட் அக்லி படத்தை இயக்குநரும், நடிகர் பிரபுவின் மருமகனுமான ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran)  இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படமானது இதுவரை சுமார் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விடாமுயற்சி தோல்விக்குப் பின் இந்த படத்தின் வெற்றியானது பெரும் பங்காக அமைந்திருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமாருக்கு இந்திய அரசு பத்ம பூஷன்  (Padma Bhushan) விருதையும் கொடுத்திருந்தது.

மேலும் நடிகர் அஜித் குமார் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, இந்தியாவின் சார்பாகப் பல கார் ரேஸ் பந்தயத்திலும் கலந்துகொண்டு வருகிறார். இதுவரை சுமார் 3 வெற்றிக் கோப்பைகளைப் பெற்றுள்ளார். மேலும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் படத்தில் இனையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் பில்லா படத்தில் நடிக்கும்போது நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அறிவுரையைப் பற்றிப் பேசியுள்ளார். நடிகர் ரஜினியின் நடிப்பிலும் கடந்த 1980ம்  ஆண்டே பில்லா என்ற படம் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித் குமாரின் பில்லா படத்தில் நடிக்கும் போது ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ் பற்றி அஜித் பேசியதை பற்றிப் பார்க்கலாம்.

ரஜினியின் அட்வைஸ் குறித்து அஜித் பேசியது :

நடிகர் அஜித் குமார் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், பில்லா படத்தின் ஷூட்டிங் பூஜையில் ரஜினிகாந்த் அட்வைஸ் பற்றிப் பேசியுள்ளார், அதில் “பில்லா படத்தின் பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் என்னைத் தனியாக அழைத்தது பேசியிருந்தார். அப்போது அவர் இந்த பில்லா படத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், என்னுடைய படத்துடன் ஒப்பிடுவார்கள், அதனால் ஜாக்கிரதையாகப் பண்ணுங்கள் என்கிறார். மேலும் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், சீரியஸாக ஒரு நாயகனாகப் பண்ணுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் கூறினார். மேலும் அவர் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்றும் கூறியிருந்தார்.

அஜித்தின் பில்லா திரைப்படம் :

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான படம் பில்லா. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அதிரடி கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் நமிதா போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது அஜித்தின் ஹிட் படங்களில் ஒன்று என்றே கூறலாம். அந்த அளவிற்கு இன்று வரையிலும் மறக்கமுடியாத படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படமானது வெளியாகி சுமார் 18 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லேப்டாப்பை தீ வைத்து எரிக்கும் மாணவர்கள் - புதிய சேலஞ்ச்
லேப்டாப்பை தீ வைத்து எரிக்கும் மாணவர்கள் - புதிய சேலஞ்ச்...
மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?
மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?...
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?...
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்...
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!...
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!...
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!...
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!...
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு...
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!...
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்...