Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.. எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் என்ன?

DMDK Alliance Meeting: தேமுதிக தரப்பில் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர், தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உயர்மட்ட உணர்வாகைகள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்.. எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் என்ன?
பிரேமலதா விஜயகாந்த்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Jun 2025 18:33 PM

தேமுதிக ஆலோசனை கூட்டம்: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என அனைத்து கட்சிகள் தரப்பிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 11 ஜூன் 2025 அன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர், தேர்தல் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், உயர்மட்ட உணர்வாகைகள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்:


அதேபோல் தேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதற்கான கூட்டம் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியின் வளர்ச்சி பணிகளை குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனையின் மேற்கொள்கிறார். தேமுதிக தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கூட்டணி யாருடன் அமைக்கும் என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

கூட்டணி யாருடன்?

நேற்றைய தினம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றார். அப்பொழுது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என கேள்வி எழுப்பியபோது இது குறித்து விஜய் தான் பதில் அளிக்க வேண்டும் என சூசகமாக பதில் அளித்துள்ளார். 2026 இல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது தான் என்றும் அப்போதுதான் தப்பு நடந்தாள் ஒரு எதிர்க்கட்சியாக அதனை தட்டிக் கேட்க முடியும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தவெகவுடன் கூட்டணி அமைக்க பிரேமலதா விஜயகாந்த் மறைமுகமாக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து ஜனவரியில் கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பாளர் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...