திமுக – காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்.. ஒரே தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் சூழல்! | TV9 Tamil News

திமுக – காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்.. ஒரே தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் சூழல்!

Published: 

25 Mar 2026 20:37 PM

 IST

Puducherry DMK-Congress: புதுச்சேரி மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தொகுதிகளில் இருந்து தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒரே தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

1 / 5புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும்  இண்டி  கூட்டணியில் இழுபறி நீடித்து வந்தது.  வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளில்  தேசிய ஜனநாயக கூட்டணியில்  என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16  சட்டமன்ற தொகுதிகளும்,  பாஜகவுக்கு 10  சட்டமன்ற தொகுதிகளும்  அதிமுகவுக்கு 2  சட்டமன்ற தொகுதிகளும்,  லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2  சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டி கூட்டணியில் இழுபறி நீடித்து வந்தது. வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 சட்டமன்ற தொகுதிகளும், பாஜகவுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும் அதிமுகவுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளும், லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

2 / 5

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்கு 16, திமுகவுக்கு 12 விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக, இரு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால், திமுக தலைமை காங்கிரஸ் தொகுதிகளில் மனு தாக்கல் செய்த தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஏ மற்றும் பி படிவங்களை வழங்கவில்லை.

3 / 5

இதன் காரணமாக அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திமுக வேட்பாளர்களாக கருதப்படாமல் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் மனு தாக்கல் செய்த அனைவருக்கும் ஏ மற்றும் பி படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அங்கீகாரம் அளிக்கப்பட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இண்டி கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்பவன், காலாப்பட்டு, மங்கலம், நெல்லித்தோப்பு, காரைக்கால் தெற்கு, திருபுவனை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

4 / 5

இவர்களை வாபஸ் பெறுமாறு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி உள்ளது.ஆனால், காலாப்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், ராஜ்பவன் தொகுதியில் வழக்கறிஞர் குமரன், மங்கலம் தொகுதியில் ரகுபதி, திருபுவனையில் வேலு, காரைக்கால் தெற்கு தொகுதியில் சக்திவேல் பிரபு ஆகியோர் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இவர்கள் தங்களுக்கான தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

5 / 5

நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், புதுச்சேரி மாநிலத்தில் நாளை வியாழக்கிழமைக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறாவிட்டால், மேற்கண்ட தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிடும் நிலைமை உருவாகிவிடும் சூழல் உள்ளது.

Follow Us