MIS : மாதம் ரூ.9,000 வட்டி மட்டும் கிடைக்கும்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்! | TV9 Tamil News

MIS : மாதம் ரூ.9,000 வட்டி மட்டும் கிடைக்கும்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Published: 

11 Feb 2026 11:53 AM

 IST

Monthly Income Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.9,000 வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு மற்றும் முதலீடு செய்யாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பான லாபத்தை வழங்க கூடிய திட்டத்தில் முதலீடு செய்வது அவசியமாகிறது.

பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு மற்றும் முதலீடு செய்யாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பான லாபத்தை வழங்க கூடிய திட்டத்தில் முதலீடு செய்வது அவசியமாகிறது.

2 / 5

அத்தகைய  திட்டங்களை தான் அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலக மாத வருமான திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் பெற முடியும். இந்த நிலையில், மாத வருமான  திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.9,000 வட்டி பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

இந்த அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு வழங்கப்படும் 7.4 சதவீத வட்டி, 12 மாதங்களுக்கு பிரித்து வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.  இதன் மூலம் மாத வருமான ஈட்ட முடியும். 

4 / 5

இந்த கணக்கில் ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இதுவே கூட்டுக் கணக்கு என்றால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதன்படி, நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு மாத வட்டி வழங்கப்படும். 

5 / 5

இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் மாதந்தோறும் ரூ.5,500 வட்டியாக வழங்கப்படும். இதுவே நீங்கள் கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் மாதந்தோறும் ரூ.9,250 வருமானம் பெற முடியும்.