கடனை அடைக்க இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்! | TV9 Tamil News

கடனை அடைக்க இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

Updated On: 

04 May 2026 21:53 PM

 IST

Two Simple Rules To Clear Your Debt | கடன் என்பது பலருக்கும் மிகப்பெரிய சவாலாகவும், சிக்கலாகவும் உள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் தனது கடனை மிக விரைவாக அடைக்க முடியும். அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5பண தேவை என்பது அனைவருக்கும் இருக்கும் முக்கியமான சிக்கல் தான். இந்த பண தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பலர் சேமிப்பு அல்லது முதலீடு செய்வர். அவ்வாறு சேமிப்பு அல்லது முதலீடு செய்யாதவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர். கடன் வாங்கும் நபர்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பர். இந்த நிலையில், கடனை சுலபமாக அடைக்க உள்ள சில முக்கிய வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

பண தேவை என்பது அனைவருக்கும் இருக்கும் முக்கியமான சிக்கல் தான். இந்த பண தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பலர் சேமிப்பு அல்லது முதலீடு செய்வர். அவ்வாறு சேமிப்பு அல்லது முதலீடு செய்யாதவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர். கடன் வாங்கும் நபர்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பர். இந்த நிலையில், கடனை சுலபமாக அடைக்க உள்ள சில முக்கிய வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5

கடனை திருப்பி செலுத்துவதில் அவலாஞ்சி என்ற முக்கிய முறை ஒன்று உள்ளது. அதாவது, இந்த முறை எதை கூறுகிறது என்றால் அதிக வட்டி விகிதம் கொண்ட கடனை முதலில் அடைப்பது ஆகும். இவ்வாறு, அதிக வட்டி உள்ள கடனை விரைவில் அடைப்பதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் வட்டியை நம்மால் சேமிக்க முடியும். 

3 / 5

இந்த முறையை பின்பற்றி கடனை அடைக்க தொடக்கத்தில் அதிக தொகையை சேமிக்க வேண்டும். அதற்கான வருமானத்தை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். எனவே கடனை முன்கூட்டியே அடைக்க விரும்பும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை சேமித்தோ அல்லது முதலீடோ செய்து வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. 

4 / 5

அடுத்ததாக உள்ள முறைதான் ஸ்னோபால். இந்த முறை எதை கூறுகிறது என்றால், குறைந்த கடன் தொகைகளை விரைவில் அடைக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் சிறிய சிறிய கடன்கள் விரைவில் அடைக்கப்படும். பிறகு அதிக தொகை கொண்ட கடன்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். 

5 / 5

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளில் எந்த முறை உங்களுக்கு சிறந்ததாக உள்ளதோ அதனை தேர்வு செய்து நீங்கள் உங்கள் கடனை அடைக்கலாம். அதாவது, உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை உள்ளது, எத்தகை ஆண்டுகளுக்கான கடன் உள்ளது உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அதற்கு ஏற்ப திட்டமிடுவது சிறப்பானதாக இருக்கும்.

Follow Us