ஹெல்த் இன்சூரன்ஸில் ஜிம் விபத்து காயங்கள் கவராகுமா? உண்மை என்ன?
Health Insurance Gym Coverage: ஹெல்த் இன்சூரன்ஸ் மிகவும் சிக்கலானது. இன்சூரன்ஸ் எடுக்கும் நபர்கள் விதிகிகளை முன்பே படித்து நமக்கு தேவையான பாலிசிகளை தேர்ந்தெடுப்பது முக்கியம். ஜிம்மில் ஏற்படும் காயங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி கவராகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த கட்டுரையில் அதுகுறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சமீப காலங்களாக மக்கள் மத்தியில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறிய ஊர்களிலும் ஜிம் (Gym) அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்யும் போது சில நேரங்களில் விபத்து ஏற்படுகின்றன. இது போன்ற ஜிம்மில் ஏற்படும் காயங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கவராகுமா என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுகிறது. பொதுவாக இன்சூரன்ஸ் பாலிசிகள் சற்று சிக்கலானவை. இதனால் பாலிசியை தேர்ந்தெடுக்கும் கவனமாக விதிகளை படித்து தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த கட்டுரையில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஜிம்மில் ஏற்படும் விபத்துகளை கவர் செய்யுமா என பார்க்கலாம்.
எந்த காயங்களுக்கு கவர் கிடைக்கும்?
பொதுவாக அதிகபட்ச ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் திடீர் விபத்துகளை கவராக கொண்டிருக்கும் உதராணமாக டம்பல் விழுந்து காயம் அடைதல், ஜிம் மெஷின்களில் இருந்து ஏற்படும் கயாயங்கள், எலும்பு முறிவு போனற திடீர் காயங்கள் இவை எல்லாம் விபத்து பிரிவின் கீழ் காப்பீடு வழங்கப்படும். அதாவது சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளை பாலிசி மூலம் பெற முடியும்.
இதையும் படிக்க : லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஜிஎஸ்டி நீக்கம்: உண்மையில் எவ்வளவு சேமிக்க முடியும்?
இந்த நிலையில் ஜிம்மில் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் கவராகிவிடும் என்றாலும் சில நேரங்களில் உங்கள் கோரக்கை மறுக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உதாரணமாக மருத்துவர்களின் ஆலோசனையை மீறி செய்யும் உடற்பயிற்சிகள், அதாவது ஏற்கனவே உடல் ரீதியாக பிரச்னை இருந்து, மருத்துவர்களின் ஆலோசனைகளை மீறி செய்யும் உடற்பயிற்சிகளால் ஏற்படும் காயங்களுக்கு கோரிக்கை மறுக்கப்படலாம்.
அதே போல ஸ்டெராய்டு அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் விபத்துகளுக்கும் நமக்கு காயங்களுக்கு சிகிச்சைகள் மறுக்கப்படலாம். இதனால் முன்கூட்டியே விதிகளை நன்கு தெரிந்துகொள்வது நல்லது.
எந்த சிகிச்சைக்கு இலவச கவர் கிடைக்கும்?
- ஜிம் விபத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி தேவைப்பட்டால் சிகிச்சை செலவுகள் கவராகும்.
- தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சைகள், மருத்துவமனை செலவுகள் ஆகியவை பாலிசியில் சேர்க்கப்படும்.
- சில பாலிசிகள் 24 மணி நேரத்திற்குள் செய்யப்படும் சிகிச்சைகள் கூட கவராகும் என கூறப்படுகிறது.
- ஆனால் பாடிபில்டிங் போட்டி, மராத்தான், பாக்சிங் போன்ற போட்டிகளில் ஏற்படும் விபத்து காயங்கள் கவரில் சேராது .
இதையும் படிக்க : 2028-க்குள் வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை எட்டும்.. அடித்து சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!
ஜிம் விபத்து ஏற்பட்ட நபர், தனது இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைந்துள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், கேஷ்லெஸ் சிகிச்சை பெறலாம். ஒவ்வொரு இன்சூரன்ஸ் பாலிசிக்கும் தனித்தனியான விதிமுறைகள் இருக்கும். குறிப்பாக விபத்துக்கான விதிகளை நன்கு படித்து புரிந்துகொள்ள வேண்டும். பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பெர்சனல் ஆக்சிடென்ட் கவர் எடுக்கலாம்.