சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்.. உள்நாட்டில் பலுச் ஆயுதப்படையினர் திடீர் தாக்குதல்!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ச் சூழலை சாதகமாக்கி, பலுச் விடுதலைப் படை பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. குவெட்டா உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் மேற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலுச் ஆயுதப்படை குழு தாக்குதல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இதனை சாதகமாக கொண்டு பாகிஸ்தானில் இருக்கும் பலுச் விடுதலைப் படை குழுவைச் சேர்ந்தவர்கள் (Baloch Liberation Army)அந்நாட்டின் ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025, ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கேட்டு நெடும்காலமாக போராடி வரும் இந்த குழுவினரின் எதிர்பாராத தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது. ஒரு பக்கம் இந்தியா, மறுபக்கம் பலுச் விடுதலைப்படை குழு என இரண்டு பேருக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு பாகிஸ்தான் விழிபிதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத் உள்ளிட்ட பலுசிஸ்தானின் அனைத்து ராணுவ நிலைகளையும் இந்த போராட்ட குழு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பசிலுஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ராணுவப் படைகள் பின்வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் மேற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
நிலைகுலைந்த பாகிஸ்தான்
ஏற்கனவே 2025 மே 8 ஆம் தேதி இரவில் அமிர்தசரஸ், ஜலந்தர், ஜெய்சால்மர், உதம்பூர் மற்றும் பிற முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து செயலிழக்கச் செய்தன. இப்படியான நிலையில் பலுச் விடுதலைக் குழுவின் தாக்குதல் பற்றி அதன் செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச் தெரிவித்துள்ள கருத்துப்படி, இந்த தாக்குதல் எதிர்பாராத ஒன்று என்றும், நாங்கள் கெச், மஸ்துங் மற்றும் கச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பல்வேறு விதமான ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்துள்ளார்.
இந்த பலுச் விடுதலை குழுவின் இலக்காக பசிலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா இருப்பதாகவும், அங்கிருக்கும் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் பல முக்கிய சோதனைச் சாவடிகளை குழுவினர் தாக்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் காம்பிரானி சாலையில் உள்ள சஃபர் கான் சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்புகள் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவதினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கும் எச்சரிக்கை
பசிலுஸ்தானில் தகவல் தொடர்பை முடக்குவதற்காக கச்சியின் ஹாஜி ஷாஹரில் அமைந்திருக்கும் தகவல் தொடர்பு டவரையும் பலுச் ஆயுதப்படை குறிவைத்து அழித்துள்ளது. இப்படியான நிலையில் இந்த குழுவைப் பற்றி தகவல் தெரிவிக்க ஜமரன் மற்றும் டைக்ரானில் உள்ளூர் மக்களுக்கு ஊக்கத்தொகைகளை பாகிஸ்தான் ராணுவம் வழங்குவதாக சொல்லப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பலுச் குழுவினர், இராணுவம் அல்லது யாருக்காவது உள்ளூர் பொதுமக்கள் உதவி செய்தால் நடக்கும் விபரீதங்களுக்கு பொறுப்பாக வேண்டும் என எச்சரித்துள்ளனர்.